பூந்தமல்லியில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய பள்ளியாக திகழும் இங்கு, கடந்த மே மாதம் முதல் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. இந்த பள்ளியின் அருகில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 10ம் வகுப்பு வரை 700 மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியிலும் கடந்த மே மாதம் முதல் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என அரசுக்கு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப் பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் சார்பிலும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதேபோல் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், 10ம் வகுப்பு முடித்தவுடன் பூந்தமல்லி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இதனால், பெண்கள் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அரசுக்கு பணமும் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக அறிவித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த இரு பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்களை நியமிக்காமல் உள்ளது, பொதுமக்களுக்கு வேதனை அளித்துள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் கல்வி அறிவு மேம்படவும், பள்ளியின் வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முக்கிய பொறுப்பாக விளங்குவார் என்பதாலும் உடனடியாக இந்த பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைவராக எம்எல்ஏ இருந்தும் பயனில்லை
பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக உள்ளார். ஆனால், இதுவரை அரசுக்கு, அவரது சார்பில் கோரிக்கை வைத்து, இப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியும் பயனின்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் இல்லை. 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லை.
ReplyDeleteஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 5 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் இல்லை. 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லை.
ReplyDelete