Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 12, 2014

    3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்.

    சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும் அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள் இணைந்து, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு
    செய்யப்பட்டுள்ளது.

    கணக்கெடுப்பு : சென்னையில் கடந்த கோடை விடுமுறையின்போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 1,150 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அடையாளம் காணப்பட்ட இந்த குழந்தைகளை, ஆங்காங்கே உள்ள உண்டு, உறைவிட பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
    அடுத்த மாதம் : பெரும்பாலான குழந்தைகள் கடைகளில் வேலை பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் மாநகராட்சி, காவல்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவை இணைந்து ஒரு குழு அமைத்து, சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த வகையான வர்த்தகத்தில் குழந்தைகள் அதிகமாக பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது கண்டறியப்படும்.அந்த வர்த்தகர்களுடன் பேசி, குழந்தை தொழிலாளர்களை பணிக்கு நியமிப்பது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.குழந்தை தொழிலாளர்களை கண்டறிய காவல்துறையின் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதை தவிர 3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    1 comment:

    Unknown said...

    ===============
    NOTE THIS POINT !!
    ===============

    (Real Seniors) : Those who got

    B.ed degree before 2005. Their

    age range is 32-42 or more....

    (Pseudo Seniors) : Those who studied

    B.ed after 2005. But they did their

    U.G degree 5 years to 10 years before

    2005.

    ================
    Senior Calculation !!
    ================

    Points

    1). The age of B.ed candidate should not

    determine his seniority. So mere (DOB)

    Date of birth should not be taken into

    account.

    2). The year he completed B.ed course

    should determine his seniority.

    Example : Vijay Vijay.

    1). He completed B.Sc Degree in 1998.

    (@ at the age of 20)

    2). Then he studied B.ed degree in 2010.

    (@at the age of 32)

    3). His age is now around 36.

    Conclusion : he is not a senior just

    because of his age 36. He is pseudo

    senior.