இஸ்ரோவில் பணிபுரிபவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக கருதப்படும் ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களில் பயின்ற இன்ஜினியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு விண்கலம் அனுப்பி, அதில் முதல் முயற்சியிலேயே இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ள நிலையில், ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வ மையத்தில் பணிபுரியும் 4486 பணியாளர்களில் 43 பேர் மட்டுமே ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,யில் பயின்றவர்கள். இதே போன்று ஆமதாபாத் விண்வெளி மையத்தில் பணிபுரியும் 1183 பேரில் 144 பேர் மட்டுமே ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,யில் பயின்றவர்கள்.
ஐதராபாத் தேசிய ஆய்வு மையத்தில் பணிபுரியும் 864 பேரில் 2 பேர் மட்டுமே ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,யில் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.