செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலைத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 25.08.2014 முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலைத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 25.08.2014 முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று “HIGHER SECONDARY EXAM SEPTEMBER / OCTOBER 2014 – PRIVATE CANDIDATE – HALL TICKET PRINT OUT” என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும். முதன்முறையாக மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள்(HP வகை ) பகுதி I, பகுதி II மொழிப்பாடத்தின் தாள் இரண்டு மற்றும் பகுதி III-ல் சிறப்பு மொழி (தமிழ் ) எழுதும் தேர்வர்கள் கேட்டல் / பேசுதல் (aural/oral skill test) திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி ( தமிழ்) பாடத்தில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.