Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 8, 2014

    டி.ஆர்.பி., வெயிட்டேஜ் மார்க், தமிழ் வழியில் பயின்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி

    ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெளியிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலில் ஒரு சிலருக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் வெளியானது.


    இந்நிலையில், தமிழக அரசு கடந்த மே மாதம் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், வெயிட் டேஜ் மதிப்பெண்களுக் கான புதிய பட்டியல் நேற்று முன்தினம் மாலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    மதிப்பெண்கள் தொடர் பாக ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, விளக்கம் தேவைப்பட்டாலோ மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மையங்களில் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் முகாம்களில், அனைத்து ஒரிஜினல் சான்றுகளுடன் தேர்வர்கள் நேரில் ஆஜராகி விவரங்களை தெரிந்து கொள்ள லாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    வெயிட்டேஜ் மதிப்பெண்களை கடந்த 2 தினங்களாக, 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இணையதளத்தில் பார்த்து வருகின்றனர். அதில், தாங்கள் ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது தெரிவித்த தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில் சிலருக்கு பிழையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    குறிப்பாக தமிழ்வழியில் படித்ததற்கான உரிமை கோருகிறீர்களா? என கேட்கப்பட்டதற்கு அதற்கு தகுதி உள்ள ஆசிரியர்கள் ஆம் என பதில் தெரிவித்து இருந்தனர். ஆனால், இப்போது இல்லை என பதிவாகி வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து, ஆசிரியர்கள் மேலும் கூறுகையில், �அரசு 5 சதவீத சலுகை மதிப்பெண் அறிவிப்பதற்கு முன்னதாக தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்த்தவர்களில் சிலருக்கு இந்த தவறான தகவல் வெளியாகி உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஒரிஜினல் மற்றும் நகல்களுடன் சென்று காட்டி தெளிவாக எழுதிக்கொடுத்த பின்ன ரும் இந்த தவறு வெளியாகி உள்ளதால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதை திருத்துவதற்காக நாங்கள் ஒரு நாள் மற்றும் பணம் செலவிட்டு மையத்திற்கு சென்று அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது� என புலம்பினர்.

    2 comments:

    prabu said...

    sir,i have claimed for tamil medium reservation in last verification.but now it's showing NO in latest weightage list.what will happen if i don't attend the clarification camp.can anyone go instead of me?.

    Anonymous said...

    weightage system cancel pannuka illa endral one more time exam apply