மேல்நிலை பள்ளிகளுக்கு இரண்டு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மதுரையில் நேற்று நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் நேற்று உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் கார்த்திகேயன், வட்ட செயலாளர் வெங்கடேசன், பொருளா ளர் வெற்றிச் செல்வன், நிர்வாகிகள் ஆத்மநாதன், மனோகரன், ஜெயச்சந்திரன், டேனியல், பிரபா, உதயசேகர், முருகன், பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத் தில் 25 மதிப்பெண்கள் இருப்பதைப் போலவே, தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கும் ஆரல், ஓரலுக்கு 25மதிப்பெண்கள் ஒதுக்க வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் 6முதல் 10 வரையுள்ள வகுப்புகளை கவனிக்க கட்டாயம் கூடுதல் தலைமை ஆசிரியர் பணி யிடம் ஒன்றை உரு வாக்கி, அதை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பணப்பலன்கள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவாக கிடைப்பதைப்போல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவாக கிடைக்க வழி செய்ய வேண்டும். சிபிஎஸ்இ முறையை ரத்து செய்ய வேண்டும். பெரியாறு அணை நீர்மட்டம் 142அடியாக உயர நீதிமன்றம் சென்று வெற்றி பெற்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.