Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 12, 2014

    பள்ளி, பஸ் வசதி இல்லாத மாணவர்களுக்கு போக்குவரத்து நிதி

    தமிழகத்தில் பள்ளி, பஸ் வசதி இல்லாத 813 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் 11,002 மாணவர்கள் உள்ளனர். இவர்களில், தொடக்கப் பள்ளிகளில் 8,035 பேர், நடுநிலைப் பள்ளிகளில் 2,967 பேர் வெளியூர்களுக்கு சென்று பயில்கின்றனர். இவர்கள் ஆட்டோ, வேன், ஜீப் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு சென்றுவர, ஒவ்வொரு மாணவருக்கும் போக்குவரத்து நிதியாக மாதம் ரூ.300 வீதம், ஆண்டிற்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது.


    இந்த நிதியை, மாணவரின் பெற்றோரிடம் பயனீட்டு சான்று பெற்று வழங்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 4,857 மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 6,145 பேருக்கு ரூ.1.84 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

    No comments: