தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.
இதில் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார்? 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா? மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாதா? நாம் நடத்திய இந்த போராட்டத்தின் நோக்கம்தான் என்ன? நமது கோரிக்கைகள் இரண்டாக பிரித்து பார்க்கலாம்.
(I). 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என்பதா? அல்லது
(II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா?
இரண்டிற்கும் முரண்பாடு உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நமது நோக்கம் தவறான பாதையில் சென்றுவிடகூடாது.
நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5% மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும். மேலும் இதில் 90க்கு மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும். இந்த வெயிட்டேஜ் முறையால் இப்போது மட்டும் பாதிப்பில்லை அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்காலங்களிலும் இது தொடரும். இப்போது நாம் ஒன்றினைந்து இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற தவறினால் நமது எதிர்காலம் என்பது? ??? ஆகவே இந்த போரட்டம் நமது எதிர்காலத்திற்கான போரட்டம்.
இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா? ஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம். ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும் மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.
சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.
கோவிந்தராஜ்.,
நாமக்கல் மாவட்டம்.
உங்களுக்கு கிடைக்காத வேலை, மற்றவர்களுக்கு கிடைக்க கூடாது. நல்ல எண்ணம் , இவ்வளவு நாளா என்ன ஐயா பண்ணிண?
ReplyDeleteThalavaliyum vaithuvalium thanakku vanthal therium
Deleteporattam pantrthu waste pa..athukku neenga nxt time jpb ku 1st preference kettu poratalam..
ReplyDeleteVaye
Deletek eppathan second list vituvangalam. .atha patri details therinjavanga please rpy
ReplyDeletePlease refer NCTE go's and rule .according to that you can fill the TET post don't waste our tet candidate's life by ARGTA brte association madurai .branch villupuram dt
ReplyDeleteGot stay
ReplyDeleteNaila Padichavan nasama porathu kojam mark aduthavan job poratha boss enna koduma sir ,
ReplyDeleteplease select the BT teachers as per seniority for particular year. if the candidate passed in TET exam then select the teachers with their seniority, because there are the curriculam they studied is different with the current.For example there is even no internal mark in their degree level in some years ago. but this they there are several colleges are autonomous so they give the full internal(25) for their students so current students have more percentage in their degree level.And in +2 level for several years ago there is only 1000 number of students are get above 1000 marks in TN state, but nowadays there are 1000 students get above 1000 marks in every district.So we can not compare the students with before 10 or 20 years back candidates.So please cancel the weightage system and follow the PG TRb and college TRB method.Wecan follow the weightage system for samacheer kalvi students.Even in college trb there is a difference b/w before 93 M.Phil and after 93 M.Phil.
ReplyDeletePostig panuvangala illa vivasayam than panna ponuma
ReplyDeleteTET ஒரு தகுதித்தேர்வு என்பதால், TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதி, அவர்களின் பாடத்தை மட்டுமே அடிப்படையாக்க் கொண்ட மற்றொரு தேர்வினை அவர்களுக்கு நடத்தி, அத்தேர்வு மதிப்பெண் (Cut off) அடிப்படையில் பணிநியமனம் செய்யலாம்.
ReplyDeleteஇதன் நன்மைகளாவன;
1) அனைவருக்கும் பொதுவான தேர்வுமுறை
2) வழக்குகளின் பிடியில் சிக்காமை
3) தகுதியோடு பாடப்புலமையையும் சோதித்தல்
4) குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமேயான சாதகமின்மை
5) குழப்பமின்மை
6) இன்னும் பல.....
நீங்கள் கூறியது சரியான தீர்வு ்.இதனை அரசு பரீசீலிக்கலாம்.
DeleteOk correct than yar seyya
Deleteவிவசாயம் செய்யவும் தண்ணீர் இல்லை யே
ReplyDeleteTET ஒரு தகுதித்தேர்வு என்பதால், TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதி, அவர்களின் பாடத்தை மட்டுமே அடிப்படையாக்க் கொண்ட மற்றொரு தேர்வினை அவர்களுக்கு நடத்தி, அத்தேர்வு மதிப்பெண் (Cut off) அடிப்படையில் பணிநியமனம் செய்யலாம்.
ReplyDeleteஇதன் நன்மைகளாவன;
1) அனைவருக்கும் பொதுவான தேர்வுமுறை
2) வழக்குகளின் பிடியில் சிக்காமை
3) தகுதியோடு பாடப்புலமையையும் சோதித்தல்
4) குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமேயான சாதகமின்மை
5) குழப்பமின்மை
Ethuvum nalla iydyathan ethil vetripetravargal mattume potti podugirargal ok ok done
Deletetet mudinthu posting podave 1 Year ku mela aguthu, ithula innoru exam vachu athula result varathukula epdium 5 years agidum thalaiva!!!!!!
DeleteSariyana mudivu irunthal viraivil thervu kidaikkum ok
Deletekaalam thaan pathil solla veandum
ReplyDeleteஒரு தேர்வு நடைபெறும் போது வெளியிடப்படும் அறிவிக்கை தேர்வில் வெற்றி பெற தேவையான மதிப்பெண்களை வெளியிடப்படும். அவ்வாறு தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். கிளார்க் பணி முதல் I.A.S பணி நியமனம் வரை இப்படித்தான் தேர்வு செய்கின்றார்கள்.ஆனால் TRB -தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களைதேர்வு செய்துவிட்டு,பிறகு ஒரு G.O. NO .71,என ஒன்றைக் கொண்டு வந்து குழப்பத்தை உண்டாக்கியது.I.A.S பணி நியமனத்தின் போதுதேவையானநபர்களைதேர்வு செய்துவிட்டு பிறகு ஒரு G.O. போட்டு மதிப்பெண் வழங்க முடியுமா? அப்படிசெய்தால் I.A.S தேர்வு எழுதியவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? TET க்கு ஒரு நீதி I.A.S க்கு ஒரு நீதியா.நீதிமான்களே! சிந்திப்பீர்! சரியான தீர்ப்பு வழங்குங்கள். நீதி வெல்லட்டும்!
ReplyDeleteG.O. NO .71, வெளியிடப்பட்ட நாள்.30.05.2014.TET தேர்வு நாள் .17.08.2013,மற்றும்18.08.2013
ReplyDeleteThat is what I thought.
ReplyDelete