தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வட்டி வீதத்தை ஏற்க, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தயாராக இல்லை. இந்நிலையில், இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று நடைபெறும் தொழிலாளர் சேமநல நிதி மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், வட்டி வீதம் குறித்து முடிவெடுப்பதை, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டிற்கு தள்ளிப் போடலாம். கடந்த 2013 14ம் நிதியாண்டில், இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, 8.75 சதவீத வட்டியும், அதற்கு முந்தைய ஆண்டில், 8.5 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.