தனது தொடக்கக் கல்வியை வலுப்படுத்த, இந்தியாவின் ஒத்துழைப்பை வியட்நாம் கோரியுள்ளது. அந்நாட்டில், CBSE பாடப்புத்தகங்கள் இன்னும் அதிகளவில் பிரபலமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வியட்நாம் தலைவர்களுடன், அந்நாட்டில் பேச்சுவார்த்தை மேற்கொண்டபோது, இந்திய நாடு, சிறந்த தொடக்கக் கல்வி முறையைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது.
எனவே, தொடக்கக் கல்வித்துறையில், எந்தளவிற்கு முடியுமோ, அந்தளவிற்கு இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அந்நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வியட்நாமில், CBSE கல்விமுறை சிறிதுசிறிதாக வலுவடைந்து வருகிறது.
தொடக்கத்தில், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களில் மட்டுமே, அந்நாட்டில், CBSE கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.