Pages

Wednesday, August 13, 2014

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கினால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு நியமிக்க படுகின்றார்கள். ஆனால் இன்று இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை விட மிக குறைவாக உள்ளதாக ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பில் அறிவிக்கப்படுகிறது.


இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடையும் பட்சத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் . ஆனால் தொடக்க கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கானல் நீராக உள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடைவது குறைய வாய்ப்புள்ளதோடு, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடமும் படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது.

எனவே தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் பட்சத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடைவதோடு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே கல்வியாளர்கள் இதனை சிந்தித்து தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கல்வி அதிகாரிகளுக்கு அலோசனை கூறவும்.

Posted by JOHN DAVID

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.