Pages

Sunday, August 31, 2014

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

DSE - PG ASST JOINING REPORT FORMAT CLICK HERE...

30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களை இயக்குநரின் 1 முதல் 12 முடிய அளித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்து
விவரங்களையும் சரிபார்த்து வேலூர் மற்றும் இதர மாவட்டத்தில் இருந்து பணி நியமனம் பெற்றவர்களை பணியில் சேர்த்துக்கொள்ளவும், அதன் அறிக்கையினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து அன்றே இவ்வலுவலகத்திற்கும் இயக்குநருக்கும் தவறாமல் அனுப்புதல் வேண்டும்.

வெளி மாநில சான்று எனில் உடனடியாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அளவுகோல் பதிவேட்டின்படி பணியிடம் காலியாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு பணியில் சேர்த்தல் வேண்டும். மேலும் அசல் வேலைவாய்ப்பு அட்டையினை பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும். 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.