Pages

Saturday, August 2, 2014

இமெயிலில் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பட்டம் படித்து முடித்து புதிதாக வேலை தேடும் இளைஞர்கள், ஏதோ பொழுது போக்கிற்கு அனுப்புவதுபோல வேலை கேட்டு நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். இது விண்ணப்பித்தவரின் மீது உள்ள நம்பகத்தன்மையைப் பாதிக்கும். இமெயில் அனுப்புவதிலும் நாகரிகம் உண்டு.


முதலாவதாக, வேலைக்கோ, பயோ டேட்டாவிலோ குறிப்பிடும் உங்களின் மின்னஞ்சல் முகவரி smartbabu@yahoo.com அல்லது sweetpriya@gmail.com என்று இருந்தால் அதைப் பார்க்கும் அதிகாரிக்கு எரிச்சல் தான் வரும். எனவே, ஒரு தொழில்முறை மின்னஞ்சல் முகவரி வைத்துக்கொள்வது நலம்.

இரண்டாவதாக, வேலைக்கான மனுவை மெயிலில் அனுப்பும் போது, சுருக்கமாக ஒரு கவரிங் லெட்டர் அடிப்பது அவசியம். அந்த அதிகாரியின் பதவியை விளித்து Dear Sir, Dear Team Leader என்று ஆரம்பித்தல் நலம். உங்களைப் பற்றிய விவரங்களை மூன்று அல்லது நான்கு வரிகளில் குறிப்பிட்டு, நீங்கள் எந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும்.

கவரிங் லெட்டர் நல்ல ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நம் நண்பருக்கு அனுப்புவது போல கொச்சையாக இருக்கக் கூடாது. உதாரணமாக, hi, hru என்று எஸ்.எம்.எஸ். அல்லது சாட் (chat) செய்வது போல இருக்கக் கூடாது.

சப்ஜெக்ட் டைப் அடிக்க வேண்டிய இடத்தில் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

முக்கியமாக கவரிங் லெட்டர் அடிக்கும்போது கவனமாக நம் சொந்த வார்த்தையில் இருக்க வேண்டும். ஏதோ இணைய தளத்தில் இருந்து காபி (copy) செய்தது போல இருக்கக் கூடாது.

அடுத்து உங்கள் பயோ டேடாவை ஒரு வோர்ட் கோப்பாக (word file) அட்டாச் செய்துதான் அனுப்ப வேண்டும்.

ஏற்கனவே அனுப்பிய இமெயிலில் இருந்து ஃபார்வோர்ட் (forward) செய்தல் கூடாது.

தேவைப்பட்டால் கடிதத் தின் இறுதியில் ஸ்கேன் செய்த கையெழுத்தை அட்டாச் செய்யலாம்.

ஒரு மெயிலை ஒரு கம்பெனிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். அதை Cc, BCc போட்டு படிப்பவர் காணுமாறு மற்றவருக்கு அனுப்புவது நாகரிகம் இல்லை.

இனி என்ன, தைரியமாக send பட்டனை அழுத்தி வெற்றிக்குக் காத்திருங்கள்.

தொகுப்பு : எம். விக்னேஷ்,

மதுரை 625009

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.