Pages

Wednesday, August 27, 2014

குழந்தைகளை மனிதனாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பு தானே?''

''ஆனால், அது அவர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள விஷயமல்ல! நெருங்கிய நண்பர் ஒருவர் தன் கிராமத்துத் திரு விழாவுக்குக் குடும்பத்துடன் தனி காரில் செல்லும்குதூ கலத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். தனக்கும் மனைவிக்கும் ஆறு மாதங்களாக விடுமுறைகள் சேர்த்து, ஊர்க்காரர்களிடம் சொல்லிவைத்து சகலத் துக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். மூன்று நாட்களுக்கு முன் பையனுக்கு ஸ்கூலில் லீவு சொல்லி இருந்தார்.
மறுநாள், முகம் இருண்டுபோய் ஸ்கூலிலிருந்து திரும்பி இருக்கிறான் அந்தப் பையன். சாப்பிடாமல், பேசாமல், ஓடியாடாமல் ஜன்னி வந்தது போல தூங்கிப்போயிருக் கிறான். தூக்கத்தில் 'நான் வேஸ்ட் இல்லை. நான் வேஸ்ட் இல்லை. நான்தான் கிரேட்!' என்று புலம்பி இருக்கிறான். என்னவோ ஏதோ என்று எழுப்பி விசாரித்தால், 'நீங்க ஸ்கூலுக்கு வந்து லீவு சொல்லிட்டுப் போனதும் எங்க மிஸ் என்னைத் திட்டுதிட்டுன்னு திட்டிட்டாங்க. 'மூணு நாளு ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு நீ ஊர் சுத்தப் போறியா? நீ எதுக்கும் லாயக்கில்லை. நீ சுத்த வேஸ்ட். இந்த மூணு நாள் பாடங்களை நீ எப்படி பிக்கப் பண்ணுவ... நீ வேஸ்ட்'னு இன்னிக்குப் பூரா திட்டிட்டே இருந்தாங்க. ப்ளீஸ்ப்பா! நான் ஊருக்கு வரலை. நான் வேஸ்ட் இல்லப்பா... நான் கிரேட்!' என்று இன்னும் என்னென்னவோ புலம்பியிருக்கிறான். மகனின் நிலையைப் பார்க்கச் சகிக்காமல் டூரையே கேன்சல் செய்துவிட்டார் நண்பர். இத்தனைக்கும் அந்தப் பையன் படிப்பது ஒன்றாம் வகுப்பு!

பச்சிளம் பாலகனுக்கு அந்த வார்த்தைகள் எத்தனை பெரிய மென்டல் அட்டாக்! இப்போது சொல்லுங்கள், பெற்றோர்கள் மட்டும்தான் 'மனிதர்'கள் உருவாகாமல் போவதற்குக் காரணமா?''

- கி.சித்ரா, மதுரை
நானே கேள்வி.. நானே பதில்! (TTFB)

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.