நாளை நான் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள போகிறேன்.
எனது சொந்த மாவட்டம் திருவண்ணாமலை. ஆனால் தற்சமயம் வேலூர் மாவட்டத்தில் வசிப்பதால் ஹால் டிக்கெட்டில் நான் வேலூர் மாவட்டம் என்று குறிப்பிட்டேன். மேலும் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இரண்டையும் வேலூர் மாவட்டத்தில் தான் பூர்த்தி செய்தேன்.
எனவே எனது பெயர் வேலூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள சாசான்றிதழ் சரிபார்ப்பில் எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தேனோ அவை அனைத்தையும் இரண்டு நகல்கள் எடுத்து அட்டெஸ்டட் வாங்கி விட்டேன். சிலர் அட்டெஸ்டட் தேவையில்லை என்று கூறினாலும் நான் கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க விரும்புகிறேன்.
மேலும் 4 பாஸ்போட் சைஸ் போட்டோ எடுத்து வைத்து கொண்டேன்.
எனது ஹால் டிக்கெட், சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் மற்றும் நான் தேர்வு பெற்றதை உறுதி படுத்தி 10.8.14 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செலக்டட் என்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் எடுத்து வைத்து கொண்டேன்.
நீங்கள்? ?????
முகநூலிலிருந்து அல்லா பகாஷ்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.