Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 15, 2014

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சிறப்பு சலுகை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கை யாளர்களுக்கு 14 ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை 90 நாள்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளித்துள்ளது.
    அதன்படி ரூ.100, ரூ.150, ரூ. 250 மற்றும் ரூ.350-க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது.மேலும், ரூ. 550 மற்றும் ரூ.750- க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முறையே ரூ. 575, ரூ. 790-க்கான டாக் டைம் வழங்குகிறது.ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச கட்டணத்தை விட கூடுதல் டாக்டைம் வழங்கும் சி-டாப் அப் வவுச்சர்களுடைய டாக்டைம் அதிகமாக இருந்தால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அந்த கூடுதல் சலுகைக் கட்டணம் பொருந்தும்.ரூ.561 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 30 முதல் 60 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 5 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். மேலும், கூடுதல் டேட்டாபயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும்.ரூ.821 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 7 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும். ரூ.1011 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 30 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. இலவசமாகப் பெறலாம்.மேலும், கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் ரூ.1949 சிறப்புக்கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஜி.பி. இலவசமாகப் பெறலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும். இந்த சிறப்பு சலுகை சென்னை உள்பட தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

    No comments: