ஆசிரியர்களே இல்லாமல் எப்படி படிப்பது? பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டவர்கள் பிரமலை கள்ளர் சமூகத்தினர். இவர்களும் கல்வி, வேலை வாய்ப்பில் சமநிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் கள்ளர் சீரமைப்புத் துறை உருவாக்கப்பட்டது.
அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கிறது என்பதுதான் வேதனை. கள்ளர் சீரமைப்புத் துறை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் 285 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் கஷ்டப்படக் கூடாது என்று, 52 விடுதிகளையும் நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் 37 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாக அரசு சொல்கிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 சதவிகித கள்ளர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவு கேள்விக்குறியாகி வருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.