Pages

Monday, August 18, 2014

கிராம கல்விக்குழு கணக்காளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கிராம கல்விக்குழு கணக்காளர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன" என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் உள்ள அலுவலகங்களில், கிராம கல்விக்குழு கணக்காளர்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்ப, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் உள்ள 22 தற்காலிக பணியிடங்கள், எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட திட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணதாரர்கள் 35 வயதுக்கு மிகாமலும், கல்வித்தகுதியாக பி.காம்., உடன் &'டேலி&' பயின்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலகத்தில் செப்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கணக்காளராக பணியமர்த்தப்பட்ட பின், மாதம் 9,900 ரூபாய் வட்டார வள மையம் மூலம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்களை, அழைப்பு கடிதம் அல்லது அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.