Pages

Saturday, August 23, 2014

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு தாள் ஒன்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணி நாடுகளுக்கான அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனம் 2012-13, அறிவிக்கை எண் 06/2014 நாள் 21.08.2014 க்கான தமிழ் நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களில் பட்டியலில் இருந்து தாள் இரண்டில் தேர்ச்சி பெற்று ஏற்கனவே 10.8.14 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.

எனினும் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது தெரிவினை ரத்து செய்து இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டுமே தங்களை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவிக்க விரும்பின் அவர்கள் மட்டும் 25.8.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரில் வருகை புரிந்து அதற்குரிய எழுத்துப்பூர்வமாக விருப்பக் கடிதத்தினை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் வருகை தர வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

உறுப்பினர் செயலர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.