Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 3, 2014

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா?என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

    நடப்பு கல்வியாண்டில்:
    தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில்,ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. 'அரசுபள்ளியில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டு வருவது போல், அரசு உதவி பெறும் பள்ளியிலும், ஆங்கில வழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், 'அரசு தரப்பில், அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது' என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள்,அதிருப்தியில் உள்ளனர்.14 லட்சம் மாணவர்கள்: இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 5,071தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில், 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.அரசு பள்ளியை போலவே, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி தேவை என, அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.கடந்த, 1990-91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறை தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது.தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை.
    மேலும், அரசு பள்ளிகளே தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.மாணவர்கள் ஏக்கம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின், நாமக்கல் மாவட்ட பொருளாளர் ராமராசு கூறியதாவது:அரசு பள்ளிகளை போலவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநிலம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய குழந்தைகள், தங்களுக்கும் ஆங்கில வழிக்கல்வி வகுப்பு கிடைக்குமா என, ஏங்கி உள்ளனர்.
    அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துவருகிறது.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்வழிக் கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளதால், மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    1 comment:

    C.Sugumar said...

    நமது அரசு மாணவர்களுக்கு விரோதமான ஒரு மனப்போக்கை ஒளிவு மறைவாக கடைபிடித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் சுயநிதி என்பதுகிடையாது. ஆனால் தனியாா் நிதி உதவி பெறும் பள்ளிகளில் தரம் உயா்த்தினாலோ, மேல்நிலைவகுப்புகளில் புதிய பாடப்பிாிவை துவக்கினாலோ சுயநிதி என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. சுயநிதியில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில்லை.மிதிவண்டி, புத்தகம்,நோட்டு, வண்ண பென்சில்,ஜியோமதி பெட்டி போன்ற அனைத்தும் உண்டாம்.மடிக்கணினி மட்டும் கிடையாதாம்.சுயநிதி என்பது பணியாளா் மானியம் கிடையாது என்ற நிபந்தனையோடு துவக்கப்பட்டது.தற்சமயம் உயா் அதிகாாிகள் மனம்போல் விளக்கங்கள் நீண்டு கொண்டேயிரக்கின்றது. அரசு பள்ளியில் அனைத்தும் நிதி உதவி பெறும் வகுப்புகள்.தனியாா் பள்ளியிலோ நிதி உதவி சுயுநிதி பள்ளிகள் என்ற வேறுபாடு.மெட்ாிக்கபள்ளிகளை தள்ளுங்கள். இதனால் தனியாா் பள்ளிகள் மட்டும் அமைந்துள்ள இடங்களில் உள்ள ஏழை மாணவர்கள் நட்டப்பட்டு வருகின்றனா். சுயநிதி என்ற போா்வையில் கட்டணக் கல்விக்கு தள்ளப்படுகின்றனா். பள்ளிக்கல்வியைப் பொறுத்தம்ட்டில அரசு நிதிஉதவியை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். புதிய பள்ளிகள் துவங்க தரம் உயா்த்த சாதி மத பேதமின்றி கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படவேண்டும்.அதையும் நிறைவேற்றும் பள்ளிகளுக்கு நிதி உதவியுடன் அங்கிகாரம் வழங்க வேண்டும்.