Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 4, 2014

    வீட்டிலிந்தபடியே பிள்ளைகளை கண்காணிக்க புது Android Application

    இது தான் இந்த வார ஹாட் டாபிக் - பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும் புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள் பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால் செய்து விட்டால் - கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம்.

    இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துள்ளியமாக கண்கானிக்க முடியும்.
    அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் - ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள் அவர்கள் இருக்கும் ஊர் - தெரு - கதவிலக்கம் முதற்க்கொண்டு பார்க்க முடியும்.
    அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும் பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம் ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன் அலர்ட் - "Guardian Alert" என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள் ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும்.
    இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பல நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க இயலும்.
    சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில் இன்னொரு வசது உண்டு
    அது தான் ஃபேக் கால் - "Fake Call" - மொபைலை நோண்டுவது போல் இந்த பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல் இல்லைனா கூட கால் வரும் - உடனே நீங்களும் உங்களுக்கு கால் வந்திருக்கிறது - எக்ஸ்கியூஸ் மீன்னு எஸ் ஆகிடலாம் -
    இது பிள்ளைகள் மற்றும் தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிசாதாமக அமையும்.
    உடனே தயக்கம் என்ன - மொபைல் இல்லாத வளர்ந்த பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த வசதியை இலவசமாக் செய்து கொடுங்கள்
    உங்களின் பிள்ளைகளின் கவலையை அடியோடு மறந்து விடுங்கள்.
    இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட நீங்கள் கண்கானிக்க முடியும்.
    இது பல மாணவ / மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க முடியும்.
    என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே

    No comments: