தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர். இதில் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார்? 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா? மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாதா? நாம் நடத்திய இந்த போராட்டத்தின் நோக்கம்தான் என்ன?
நமது கோரிக்கைகள் இரண்டாக பிரித்து பார்க்கலாம். (I). 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என்பதா? அல்லது (II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா? இரண்டிற்கும் முரண்பாடு உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் நமது நோக்கம் தவறான பாதையில் சென்றுவிடகூடாது. நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5% மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும்.
மேலும் இதில் 90க்கு மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும். இந்த வெயிட்டேஜ் முறையால் இப்போது மட்டும் பாதிப்பில்லை அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்காலங்களிலும் இது தொடரும். இப்போது நாம் ஒன்றினைந்து இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற தவறினால் நமது எதிர்காலம் என்பது? ??? ஆகவே இந்த போரட்டம் நமது எதிர்காலத்திற்கான போரட்டம். இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா?
ஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம்.
ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும் மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம் . சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.
திரு.கோவிந்தராஜ்,
நாமக்கல் மாவட்டம்.
கவன ஈர்ப்பு போராட்டம் BT ASSISTANT
ReplyDeleteநண்பர்களேநேற்று முடிந்த உண்ணா விரத போரட்டத்தை அடுத்து இன்று TRB ( DPI ) பள்ளிகல்வி துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அனைவரும் உணவுகூட உண்ணாமல் மாலைவரை சமுதாய கூடத்தில் தொடர்கிறது. நாளையும் தொடரும். அனைவரும் நாளையும் இதேபோல் TRB அலுவலகம் முன்பு வந்துவிடவும். கடைசி முயற்சி நன்றி.
BT ASSISTANT 2013
Sir pls weightage vaendam 5% relaxation vaendam endral amma koduls matargal endru nenaikiraen. Adhanal indha murai pass seidha anaivarukkum aduthadutha postingil vaelai urudhi endrum adhu varai tet exam nadatha kudadhu endrum kaetaal oralavu nadakalam enseu nenaikiraen.
Deletevelga poratdam nall idea kodutha sir rukku oru nantri.......,weitage muraiyai maadri naal pothum yarum bathikka paduvathilai namakku therikira vishayam govtkku theriyalume....... amma than kappathanu...amma...... amma kaappathuvirgal endra nambik kail.............. tamil padiththa pavapatta jenmam...............
ReplyDeleteYen eppadi anaivarathu valkaiyilum viladugireergal... Weightage enbathu anaivarukkum pothuvanathu than. Parapatcham illamal ullathu. amma sariya muraiyai than pinpatrugrargal.....
ReplyDeleteungalukuna selectn listna vitanga yarlam select nu therinjathu. paper 1 nu iruku. marandhutingala. ethalayume engala include pana matringa. nanga ena pavam panom apdi.
ReplyDeleteungalukuna selectn listna vitanga yarlam select nu therinjathu. paper 1 nu iruku. marandhutingala. ethalayume engala include pana matringa. nanga ena pavam panom apdi.
ReplyDeleteபேப்பர் 1 நண்பர்களுக்கு வணக்கம். நாமும் மிகப்பெரிய அளவில் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டியது நமது கடமை . 33000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளோம் ஆனால் காலிபணியிடமோ வெரும் 1675 மட்டும் தான். தாள் 2 ஐ விட நாம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். நாமும் வழக்கு தொடர வேண்டியது கட்டாயமாகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நமெக்கென்ன என்று சுயநலமாக இல்லாமல், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வழக்கு தொடர வேண்டியது கட்டாயம். அனைவரும் சென்னை வாரீர். வழக்கு சம்பந்தமான உதவிகளுக்கு அழைக்கவும்.
ReplyDeleteகா
98433 11339
98437 34462
99443 58034