Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 8, 2014

    தமிழகத்தின் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லை: மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கை

    "தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில், அதாவது, 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


    இணையதளத்தில்...

    நாடு முழுவதும், மாநில வாரியாக, அதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக உள்ள அரசு பள்ளிகள் எண்ணிக்கை, அதில், எத்தனை ஆண்கள் அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை; எத்தனை அரசு பெண்கள் பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்ற புள்ளி விவரங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மொத்தம் உள்ள, 37,002 அரசு பள்ளிகளில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.17 ஆயிரம் கோடி

    இதன்படி, மொத்த அரசுப்பள்ளிகளில், 15.45 சதவீத பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 - 14ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறைக்கு நடப்பாண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டுகளிலும், அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்தும், அரசு பள்ளிகளில் அடிப்படையான கழிப்பறை வசதியே முழுமையான அளவிற்கு நிறைவேற்றப்படவில்லை என்பது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி சட்ட சபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

    எது சரி?

    அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கழிப்பறை வசதிகள் இல்லாத, 2,057 பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது என முதல்வர் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு அறிக்கையில், கழிப்பறை வசதி இல்லாத 5,720 பள்ளிகள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில், எந்த புள்ளி விவரம் சரியானவை என தெரியவில்லை.

    கல்வித்துறை கருத்து என்ன?

    கல்வித்துறை வட்டாரம் தெரிவித்த கருத்து: பட்ஜெட்டில், அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிந்தாலும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிதி, சம்பளத்திற்கே செலவாகி விடுகிறது. மீதமுள்ள நிதி, மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது.

    ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடை நிலைக் கல்வி திட்டம்) மற்றும் எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆகியவற்றுக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டுதான், ஓரளவிற்கு, அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

    கழிப்பறை இல்லாத பள்ளிகள் விவரம்

    மாவட்டம் - மொத்த பள்ளிகள் - பெண்கள் பள்ளி - ஆண்கள் பள்ளி

    சென்னை - 332     0     0

    கோவை - 1,963     70      270

    கடலூர் - 1,417     24     82

    தர்மபுரி - 1,362     92      134

    திண்டுக்கல் - 1,305     182      84

    ஈரோடு - 1,791     43     134

    காஞ்சிபுரம் - 1,425    8     51

    கன்னியாகுமரி - 518     0    5

    கரூர் - 805   0   236

    கிருஷ்ணகிரி - 1,669   36   259

    மதுரை - 1,230    161    222

    நாகை - 919    16    32

    நாமக்கல் - 995     27     234

    பெரம்பலூர் - 940    40     198

    புதுக்கோட்டை - 1,533    73    286

    ராமநாதபுரம் - 1,062    67    150

    சேலம் - 1,728    60    299

    சிவகங்கை - 1,111     55    161

    தஞ்சாவூர் - 1,370    16    38

    நீலகிரி - 429     8     35

    தேனி - 528     21     7

    திருவள்ளூர் - 1,454    81     130

    திருவாரூர் - 930     9     22

    தூத்துக்குடி - 704     17     69

    திருச்சி - 1,272     40     116

    நெல்லை - 918     62    138

    திருவண்ணாமலை - 1,968    11    110

    வேலூர் - 2,229    32     257

    விழுப்புரம் - 2,116      161     390

    விருதுநகர் - 979     30    129

    2 comments:

    Anonymous said...

    நேற்றய தினமணி நாளிதழில் ஒரு அதிமேதாவி அரசு ஊழியர்களின் குழ்ந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என கூறியுள்ளார்.முதலில் அரசியல்வாதிகளின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கவேண்டும் பத்திரிக்கையாளர்கள்குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கவேண்டும்.குறிப்பாக இந்த செய்தியை படிக்கவேண்டும்.

    Anonymous said...

    அரசு பள்ளிகளில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை