Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 16, 2014

    கோவை-ஆ குறுமைய 44 பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் சாம்பியனான பள்ளிகள்

    கோவை கல்வி மாவட்ட கோவை-ஆ குறுமைய 44 பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியும், மாணவியருக்கான பிரிவில் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன. இந்த தடகள போட்டிகள், புனித மரியன்னை மேல்நிலை பள்ளி சார்பில் நேரு ஸ்டேடியத்தில் நடந்தன.


    கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கீழ் கோவை கல்வி மாவட்டத்தில் 380 பள்ளிகளை எட்டு குறுமையங்களாக பிரித்து, 14, 17, 19 வயதுக்குட்பட்ட முறையே ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவு மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவு தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.

    மாணவர் பிரிவு சாம்பியன்கள் 14 வயது ஜூனியர் பிரிவில், பி.ஆர்.சித்தாநாயுடு நினைவு மெட்ரிக் பள்ளி சங்ராம் நாயக் 13 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி தினேஷ் 13 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர்சீனியர் பிரிவில், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி விவேகானந்தன் 15 புள்ளிகளுடனும் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    பள்ளி சாம்பியன்கள்

    14 வயது ஜூனியர் பிரிவில், பி.ஆர்.,சித்தாநாயுடு நினைவு மெட்ரிக் பள்ளி 35 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி 43 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன. கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 56 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

    மாணவியர் பிரிவு சாம்பியன்கள்: 14 வயது ஜூனியர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி தெரசா கிரேஷ் மிகேல் 15 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி மிருதுலா 13 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி லோகமுத்ரா 20 புள்ளிகளுடனும் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    பள்ளி சாம்பியன்கள்: 14 வயது ஜூனியர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி 34 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி 27 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில், செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி 32 புள்ளிகளுடனும் சாம்பியன் பட்டம் வென்றன. அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி 48 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

    No comments: