Pages

Saturday, August 30, 2014

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு தாமதம்; மாணவர்கள் தவிப்பு

கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.


பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இதற்கான முடிவுகள் வெளியான பின், ஜூனில் உடனடி மறுதேர்வு நடந்தது. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அடுத்த மாதமே இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மதிப்பெண் பட்டியல்களும் வழங்கப்பட்டன. ஆனால் 7 ஆயிரம் பேருக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

முடிவுகள் தாமதமானதும் பலர் தேர்வுத் துறையிடம் விளக்கம் கேட்டனர். ஆயிரம் பேருக்கு மட்டும் அதிகாரிகள் முடிவுகளை வெளியிட்டனர். ஆனால், மற்றவர்களுக்கான முடிவுகள் தெரியாத நிலையில் அவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத நிலையுள்ளது. சேர்க்கை முடிந்தநிலையில், ஓராண்டு படிப்பு வீணாகிவிட்டதாக புலம்புகின்றனர்.

கல்வித்துறையினர் கூறுகையில், ‘இந்தாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்காக, ’பார்கோடு’ முறை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் ’சாப்ட்வேர்’ பிரச்னையால் முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது,‘ என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.