Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 13, 2014

    தமிழகத்தில் 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்

    தமிழகத் தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தை களை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் தொடக்கப் பள்ளி களில் போதிய ஆசிரியர்கள் இருக் கிறார்களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் (எஸ். இ.எம்.அய்.எஸ்) மய்யம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
    கடந்த 2011 -2012ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற் போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
    அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தை கள் படிக்கின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.அய்.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது.
    மேலும் மலைப்பிரதேசம், எல்லை யோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளி களில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித் துள்ளது.
    இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரி யர்களை கொண்டே இவை இயங்கு கின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
    இதுகுறித்து ஆசிரியர் சங்கங் களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளி களில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்று விட் டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண் டும்.
    தொடக்கப் பள்ளி ஆசிரியர் களை புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக் கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரி யருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இது போன்ற பள்ளிகளில் அதிக மாணவர் களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    1 comment:

    Anonymous said...

    thodakkappalli mattum illamal non ssa palligalil padavariyaga asiriyar niyamanam seithal mattume kalvith tharam uyarum.maths bt irunthal science bt illai .social science bt arave illai .appuram ethanai review meeting pottal enna ? asiriyargalai punishment seithu enna palan? adippadayil ulla kuraigalaik kalaya vendum.idhaipattry entha uyar aluvalargalum arasin gavanathirku kondu selvathe illai.