ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு பெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த, மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா, அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால், பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பிரமாண்டமாக நடந்தது. அதன்பின், தற்போது தான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில், நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு, முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு, இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள், 2,000 பேரின், தேர்வு பட்டியல் ஒப்படைக்க உள்ளது.
second list vara vaaippe illaiya
ReplyDeleteபணி நியமனம் பெரும் அனைத்து ஆசிரிய நண்பர்கள் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeletesecond list patri yarume pesa mattentringa...apa second list illaiya
ReplyDeletetn kalvi la comment anuppa theriyuthu..bt kalvi seithihal la comment anuppa theriyala..plz teach me
ReplyDeleteARGTA brte association got stay in madurai high court .the case say that fill the BT post in hi&hr sec after brte conversion as per go 158 by argta association villupuram branch.
ReplyDeletePoradiya pattathari asiriyargal kaidu , porattam vetri pera valthukkal by 40 vayathai kadantha TET pass seithum velai kidaikkatha pattathari. Kadavule ( AMMA ).
ReplyDeleteUngal kulanthaigal ( pattathari asiryargal ) poradugirargal avrgalukku valkkai( velai) tharungal AMMA( kadavule) .
ReplyDeleteIf it happens everything wil b ok.
ReplyDeleteporattam pannum suyanala vathikale, tet verification pannum pothu summa irunthutu namakku kedaikalaye nu aathanguthala porattam thoondi viduringa. old syllabus la padichathala new syllabus tet la pass panna mudiyathunu solra neenga eppadi new syllabus la teach panna poringa. suyanala vathigal.
ReplyDeletePorattam nadathupavargal suyanalavathi alla , nengale SUYANALAVATHI.
DeleteSariyaga sonninga friend. Porattam pandravanagalam 2012 tet la, 2013 c.v appola enga ponanga. eppa vadu strike pandranga. Old syllabus padichom nu karanam soldranga. Neenga soldra mathiri eppudi new syllabus la teach panna mudium.....
ReplyDeleteEngalaukku entha syllabus koduththalum arumiyaga padam nadathi 100 % result kodukkamudiyum ok tholare
Deleteபடித்தது பழைய பாடத்திட்டம்.டி.இ.டி தேர்வு எழுதியது புதிய பாடத்திட்டம்.ஏன் எங்களால் பாடம் நடத்த இயலாது?
ReplyDeleteபடித்தது பழைய பாடத்திட்டம்.டி.இ.டி தேர்வு எழுதியது புதிய பாடத்திட்டம்.ஏன் எங்களால் பாடம் நடத்த இயலாது?
ReplyDeleteinnum porattam nadakkutha nanbarkale. case enna achu
ReplyDeleteDont be head weighted TET selected candidates. Without passing TET exam most of the teachers achieving, in the other hand most of the 2012 TET passed teachers has no teaching skills. TET exam is must for only to fulfill RTE act but teaching govt school children is not an easy task. It has an individual skill. So Let them to fight for their rights. Dont hurt them.
ReplyDelete