சங்கராபுரம் அருகே பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 900 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஒரு மாதமாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 150 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு தமிழ்ப் பாடத்திற்கு மட்டுமே ஆசிரியர் உள்ளார். மற்ற பாடங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஒரு ஆசிரியர் கூட இல்லை. 33 ஆசிரியர்கள் பணியாற்றிய இடத்தில் தற்போது 10 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
பள்ளி திறந்து 50 நாட்களாகியும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை நியமிக்க கோரி அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை அரசம்பட்டு - சங்கராபுரம் சாலையில் பள்ளிக்கு முன்பாக மாணவ மாணவிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன், துணை தாசில்தார் ரகோத்தமன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
வேறு பள்ளியிலிருந்து சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதால் மாணவர்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.