Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 9, 2014

    பள்ளிகளில் யோகா : சுப்ரீம் கோர்ட்டில் மனு

    பள்ளிகளில், யோகா கற்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சேத் என்பவரும், பத்மபூஷன் விருது பெற்ற, டாண்டன் என்பவரும், பள்ளிகளில், யோகா போதிப்பதை கட்டாயமாக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
    இந்த, மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, பள்ளிப் பாடத்தில், யோகாவையும் சேர்க்க வேண்டும். யோகா போதிப்பதை கட்டாயமாக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தனர்.இந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதி டாட்டூ தலைமையிலான, உச்ச நீதிமன்ற, பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:யோகா தொடர்பான இந்த மனுவை, நாங்கள் விசாரணைக்கு ஏற்கிறோம். அதேநேரத்தில், இந்த வழக்கில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் தவிர, அனைத்து மாநில கல்வி வாரியங்களையும், ஒரு பிரதிவாதியாக, மனுதாரர்கள் சேர்க்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    1 comment:

    C.Sugumar said...

    இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை தருவது யோகாஎன்னும் அற்புதக்கலையாகும்.அமொிக்காவின் அதிபர் மாளிகையில் பொது மக்களுககு யோகாவகுப்புக்கள் இலவசமாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அரபு நாடுகளில் ஜெயிலில் உள்ள குற்றவாளிகளுக்கு அரசு செலவில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகினறது. இந்தியாவில் யோகா பெரிதும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. தினசரி யோகா விற்கு அனைத்து மக்களும் சிறிது நேரம் ஒதுக்க மக்களை தயார் செய்ய வேண்டும். அனைத்து வித்யாா்த்திகளையும் யோகா செயயும் பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.