பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக, மற்ற பாடப் பிரிவுகளை,
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதியான, இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்தவர்கள், மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவர். தவிர, அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ்2 கல்வித் தகுதியை, தமிழ்வழி அல்லது ஆங்கில வழி, எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை.
பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருப்பதை பொறுத்து, 20 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் அரசு கூறுகையில், ''தமிழ்வழியில் படித்த ஆசிரியர்களுக்கு, இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, வரவேற்கத்தக்கது.தவிர, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங்கள் வரவேண்டியுள்ளது. இதில், அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்,
தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை, கூடுதலாக அதிக வாய்ப்புள்ளது,'' என்றார்.
what about minority language and subjectwise vacancies? We are abandoned. Nobody is there mind us. Oh! kindly help us.
ReplyDeleteDear Minority friends, raise your voice for justice, we will be left like a sheep without a shepherd.
ReplyDeleteWhat have we done being a minority language speaking people (Kannada, Telugu, Malayalam & Urdu). Why nobody is bothered about us? How to reveal this pain, agony, depression to Honorable CM?. Please help us out and we want to know the vacancy details...
ReplyDeleteYou should fight for justice we will cooperate you. Sorry to say but it's fact that you minority people are lazy. Good luck.
ReplyDeletehi, papper 2 tamil wei 66.43 BC job kedaikkuma pls reply
ReplyDeleteThanks for a genuine opinion. I tried with few but as you said they are lazy and aimless. The believe in spoon feed and luck not on their confidence.
ReplyDelete