Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 6, 2014

    பணிநீக்கம் செய்யப்பட்ட கணினிஆசிரியர்கள் முதல்வரின் பாதம் தொட்டு எழுதும் கண்ணீர் கடிதம்

    நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்,  நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அனைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம். அம்மா எங்கள் அணைவருக்கும் சுமார் 40 வயதை கடந்து விட்டது அம்மா, அம்மா நாங்கள் கடந்த 14 வருடங்களாக அரசுக்கு எங்கள் உழைப்பையும் , வியர்வையும் கொட்டி விட்டோம். மற்ற ஆசிரியர்களாவது பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதுதான் அவர்கள் வேலை.
    ஆனால் நாங்கள் பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதும் அல்லாமல் பள்ளியில் சம்பள பில் போடுவது, கணினி மூலம் உள்ள அணைத்து வேலைகளையும் பள்ளியில் செய்தோம். மற்றும் முதன்மை கல்வி அலுவர் அலுவலகத்தில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் எப்போதும் கூப்பிட்டாலும் ஓடி போய் இரவு பகல் அல்லாது வேலை செய்தோம். திடிரென்று சென்னையில் கணினி சம்பந்த பட்ட வேலை என்றால் உடனே பிள்ளை, மனைவி என்று பார்க்காமல் முதன்மை கல்வி அலுவலர் சொன்னவுடன் செய்தோம். கடந்த ஆண்டு மாணவர்களின் விவரத்தை கணினி பதிவு செய்ய இரவு , பகல் என்று வேலை செய்தோம். மாண்வர்களின் உதவித் தொகையை பெற கணினியில் பதிவு செய்வது என்றும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை பதிவு செய்வது என்று என்று எங்கள் உழைப்பு மற்றும் இளமையையும் அரசுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொடுத்து விட்டோம். அம்மா நீங்கள்தான் எங்கள் மீது கருணை காட்ட வேண்டும். 


    நாங்கள் கடந்த 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்தோம்.

    அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டார்கள்.

    இப்போது அவர்களுக்கு சுமார் 45 வயதை கடந்தவர்களாக காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் வேற வேலையும் செய்து பிழைக்க வழியில்லை. அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. பிள்ளைகளை படிக்க வைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள்.  இப்போது வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் உள்ளோம். 


     முதல் தேர்வு :-

     652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தோம். எங்களின் வேலை திறனுகாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும் 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினி பயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது. ஆசிரியர் தேர்வு செய்த தவறுக்கு நாங்கள் பழியாகி விட்டோம்.

     இரண்டாவது தேர்வு :-

    பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம். இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT(மெட்ராஸ் ஐஐடி) யில் உள்ள கல்வி வல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள் முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில் ஒப்படைத்தார்கள். அதை வாங்கி கோர்ட் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 க்கு மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.

    7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை 27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். 27 கேள்வி தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறான கேள்விகள் என்று கண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்து விட்டது. பின்னர் எப்படி தேர்ச்சி பெற முடியும். எங்களை தவறான கேள்விகள் எடுத்து எங்கள் வாழ்கையை சீரளித்து விட்டார்கள்,  அந்த 20 தவறான கேள்விக்கான நேரம் 1.15 மணி நேரத்தை திரும்ப தருவார்களா. ஆசரியர் தேர்வு வாரியம்.

    நாங்களும் ஆசிரியர்கள்தான் அம்மா,  நாங்கள் வகுப்பில் நடத்தும் தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் , மாணவர்கள் அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள். நீங்கள் தவறாக கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறி மதிபெண் போட வைத்து விடுவார்கள். வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கை தேர்விற்கு எப்படி கழிக்க முடியும். கழி்த்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்.



    ** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.

    ** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

    ** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
    ** தற்போது மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கூட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடபட்டுள்ளது.



    நாங்கள் என்ன செய்தோம். எங்களுக்கும் தவறான கேள்விதான், நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடி கல்வி வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.



    இவர்களாவது புதியவர்கள், நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம். எங்களுக்கு கழித்து விட்டார்கள்.



    மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லை, மற்றவர்கள் போல் எங்களுக்கு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும் நடத்த வில்லை. நாய், பசு போன்று அணைத்து ஆடு, கோழியையும் பார்க்க வேண்டும் அதை கொன்று சாப்பிடக்கூடாது என்று கூறும் நாம் , மற்ற மனிதர்களை போல் எங்களை பார்க்க வில்லை 

     அம்மா நாங்கள் அணைவரும் மிகவும் மனம் நொந்து உள்ளோம் அம்மா , வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்கிறோம் அம்மா . ஆதலால் அம்மா அவர்கள் தலையிட்டு சுமூக தீர்வு காண வழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.



    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவே எங்களையும் பாதுகாக்க வழிசெய்ய



    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும், இயக்குநர் அவர்களும் எங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

     நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ மாட்டோம். அப்படி நடத்தவும் எங்களுக்கு மனம் இல்லை பணமும் இல்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் அம்மா.

    அம்மா இடிபாடுகளில் சிக்கிவர்களை ஆதரிக்கும் உங்கள் நல்ல உள்ளம், ஈராக்கில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் உங்கள் நல்ல உள்ளம், மீனவர்களை காக்க உறுதி செய்யும் உங்கள் நல்ல உள்ளம்  எங்களையும் காக்க வழி செய்ய வேண்டும்.  அம்மா நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் அம்மா, எங்கள் வாழ்வை காப்பாற்ற உங்களால்தான் முடியும் அம்மா, அம்மா நாங்கள் என்றும் உங்களை வழியில் இருப்போம் அம்மா நன்றி அம்மா.


    ஆசிரியர் தேர்வு வாரியம்  இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம் அம்மா, 



    இப்படிக்கு .

     கணினி ஆசிரியர்கள்

    29 comments:

    Anonymous said...

    ammava nambama courtkku poniga illa.........

    Anonymous said...

    மாண்புமிகு முதல்வர் பிறந்த நாள் அல்லது முக்கிய நாட்களில் அரசின் கவனத்தை நோக்கி இரத்த தானம் செய்யுங்கள் .நல்லது நடக்கும் ...

    Anonymous said...

    பாதிக்கப்பட்ட கணினி ஆசிர்யர்களின் பிரச்சனையை அவ்வப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் டி.என்.கல்வி ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி. காலம் உள்ளவரை உங்களை மறக்கமாட்டோம்.

    Anonymous said...

    thramiyum arivum namakku kadavul niriyave kodithirukkar nam en azhuthu polambanum nam thiramiyi tnpsc /rrb/bsrb moolam prove pannuvoom.chilly comments idam kodukkavendam

    Anonymous said...

    Adappaavigalaaa,
    652 perukku kavalaippadareengaley. unga arasiyalaala 15000 b.ed cs muraiyaa padichavanga innum roadla irukkaanga. Tr aavomnu nambi innum b.ed padichittu varravanga irukkanga. ithellam tnkalvi trkku theriyaathaa.

    Anonymous said...

    The Government of tamil nadu AMMA should attention 652 computer instructor's oblication.The only choice Amma can take care of their problem.Otherwise any body including court nothing do it . So 652 comp ins to believe AMMA AMMA

    Anonymous said...

    எங்க இவங்க்க செஞ்சாங்க. எனக பள்ளியில் கணினி பயிற்றுநர் இருந்தாலும் இந்த எல்லா வேலையையும் நான் தான செஞ்சேன்.
    இப்படிக்கு,
    -ஒரு பட்டதாரி ஆசிரியர்

    Anonymous said...

    சார் தற்போது அம்மா அம்மா என்று கூறும் நீங்கள் தானே கடந்த 2006 சட்டசபை தேர்தலின் போது முதலமைசர் அம்மா அவர்களுக்கு எதிராகவும் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்திர்கள், இது தமிழ்நாடில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஓன்று, நீங்கள் அன்று செய்த துரோகத்தை முதலமைசர் அம்மா அவர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள், தற்போது நீங்கள் எத்தனை முறை அம்மா அம்மா என்று கபட நாடகம் ஆடினாலும் உங்களை அம்மா அவர்கள் நம்ப மாட்டார்கள், உங்களின் பணி நியமனத்தின் போதே முறையான கல்வி தகுதிடைய B.Ed., பட்டதாரிகளுக்கு மட்டுமே கணினி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தங்க தாரகை முதலமைசர் அம்மா அவர்கள் அறிக்கை விட்டார்கள், அது உங்களுக்கும் தெரியும் அப்படி இருந்து தற்போது அம்மா அம்மா என்று பொய்யான நாடகத்தை நடத்தி மீண்டும் பணியினை பெற்றுவிடலாம் என்று நீங்கள் செய்யும் சதி ஒருபோதும் முதலமைசர் அம்மா அவர்களிடம் நடக்காது என்பதனை நீங்கள் கூடிய விரைவில் தெரிந்துகொள்ளபோகிறிர்கள், மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முறையான கல்விதகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி என்பதில் உறுதியாக இருக்கும் முதலமைசர் அம்மா அவர்களுக்கு எங்கள் பணிவான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    Anonymous said...

    652 பேரும் கவலைப்பட வேண்டாம்.20000 B.ed cs நீங்ளும் கவலைப்பட வேண்டாம்.இப்போதைக்கு வேற வேலையை பார்க்கலாம்.

    Anonymous said...

    ²ý þó¾ ÒÄõÀø ÜÊ Ţ¨ÃÅ¢ø þ¾üìÌ ÓÊ× ¦¾¡¢óÐÅ¢Îõ

    Anonymous said...

    The Hon'ble High court ordered to terminate the TWICE FAILED 652 candidates on july 2013, then The Hon'ble SUPREME COURT approved the High court order. How can we expect Govt can favour the failed candidates against the SUPREME COURT order.

    Anonymous said...

    நான் தற்போது கணினி படித்த பி.எட் படித்த பட்டதாரி. அப்போதே Private Contract விடும் போது அந்த 652 பேரும் தடுக்கலேனா யாரும் இன்னும் 10 வருசத்திற்கு உள்ளே போக முடியாது. அத புரிஞ்சிக்கொங்க. நீங்க சம்பாதிக்க 1000, 2000 , 3000 என்று நோக்கம் போல் வாங்கி சைக்கிளில் வந்த சந்திரவாணன் , குணவதி இப்போது சந்திரவாணனுக்கு சொந்தமாக Innova Car இருக்கு. குணவதிக்கு சொந்தமாக அருப்புக்கோட்டையில் பிளாட் வாங்கி போட்டுருக்கா . அரசு தேர்வு என்று சொல்ல ஆண்டவணை பிராட்திக்கின்றேன். நீங்க நல்லாவே இருக்க மாட்டேங்க. இப்போது இருக்கும் முக்கால் வாசி பி.எட் பட்டதாரிகள் இந்த 652 பேரிடம் படித்தவர்கள்தான். நானும் கூட. பாவம் ஒரு 30 பி.எட் பட்டதாரிகள் சம்பாதிப்பதற்கு இந்த 652 பேர் வாழ்வை வீணாக்காதீர்கள். நீ்ங்க என்னயா கேட்க்கிறீங்க. அப்ப அவர்களை தகுதி இல்லை என்று சொல்லுகிறீர்கள். நீங்க தேர்வே இல்லாம SENIORITY யில் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அவர்கள் தேரவு எழுதி தோல்வி அடைந்து இருக்கீறார்கள் அவ்வளவுதான். தேர்வுக்கு வராதவன் பெரிதா. தேர்வுக்கு எழுதி தோல்வியுற்றவனை தகுதி என்று கூறலாம். தேர்வே வேண்டாம் என்று கூறுபவனை எப்படி தகுதி உள்ளவன் என்று ஏற்றுக் கொள்ள முடியும். இது அரசிற்கும் தெரியும். அரசு தேர்வு என்று கூற வேண்டும். இன்னும் ஒன்று சொல்லுகிறேன். இனி பி.எட் படித்து SENIORITY கேட்பவர்களுக்கும், தேர்வு என்று கூறுபவர்களுக்கும்தான் போட்டி. இந்த 652 பேரை விட்டு விடுங்கள். தயவு செய்து பி.எட் படித்த பட்டதாரிகளே இனி இவர்களை நம்பி ஏமாறதீர்கள். உ.ம். நான் சென்ற மாதம் பி.எட் படித்த நிர்வாகிற்கு இன்டர்நெட்டில் போன் நம்பர் பார்த்து போன் பண்ணினேன். உடனே அவர் முதல் பேச்சாக சங்கத்திற்கு 5000 கொடுங்க அடுத்த வார்த்தையை பேசுங்க என்று சொல்லுகிறார். என்னமோ கொடுத்த வைச்ச மாதிரி. இப்படி ஏகப்பட்ட பேர் ஏமாந்து இருப்பீர்கள். இ்னி ஏமாறவேண்டாம். அரசிடம் தேர்வு என்று குரல் கொடுப்போம்.

    Anonymous said...

    The High court directed to conduct written exam to 652 vacant post on 18.09.2013. The matter was taken to the Suprerme court .The supreme court set aside the High court order and direct the state Govt RECRUIT 652 VACANT POST THROUGH EMPLOYMENT EXCHANGE SENIORITY.AS already directed by the supreme court on 19.11.2009. And supreme court states the excisting 175 vacancies and 652 futur vacancies are equal stage.NOW whether the GOVT shall follow the SUPREME COURT ORDER OR NOT? Let us wait and see.Please note Both TWO recruitment test (2008and2010) was conducted by the Govt only for contract emplyeese even THE HIGH COIRT AND SUPREME COURT ORDERED the exam ONLY for conyract people WITHOUT B.ED . the Govt and Court RESTRICTED the BED candidates NOT TO WRITE THE EXAM.and The Court directed the 175 vac and 652 futur vac through EMP.EXC.SENIORITY.now Supreme court says 652 vacancies under the supreme court.not only652 ALL 1880 POSTS ARE UNDER THE SUPREME COURT ORDER.

    Anonymous said...

    மேலே குறிப்பிட்ட கருத்து 652 பேரில் ஒருவருடையது.b.ed cs படித்தவருடைய கருத்து அல்ல.

    ramya dharmapuri said...

    we want exam for computer teacher post not qualified persons also write exam . so we are well qualified so we fight for exam .. exam is the best way for solution ..

    Anonymous said...

    652 Terminated Computer Instructors are expecting our re appointment.. because the Supreme Court Says "The large number of in such person had required qualification in the meantime" ie B.Ed degree. Also Supreme court gave the order for mark cause on 28.march.2014 "The petitioners are free to work out their remady in earlier judgement dated on 7.3.2014."

    Anonymous said...

    Hello friend, If we want to get the valuable order from the supreme court AT FIRST WE MUST ADMIT OUR CASE in the supreme court.....It is very,very DIFFICULT to admit the case ...after admiting several round of arguement completed then we can get valuable ORDER.
    In the S.L.P (CIVIL)CC.3288-3297and SLP (CIVIL)5490-5495 and connected SLP'S are" DISMISSED " on 7.3.2014. The Order said "WE ARE NOT INCLINED TO INTERFERE WITH THE HIGH COURT ORDER AND SLP'S ARE ACCORDINGLY DISMISSED ". It means we are not changing the high court order (The Review petition Justice Paul vasanthakumar Bench Dismissed "No merit in awarding mark case" on 17.01.2014.)
    So we can easily understand it is valuable order or not.
    We remember , last year the S.L.P.1408 OF 2013 ON 28.01.2013 the SLP "DISMISSED" and the order is "LIBERTY TO APPROACH THE GOVT FOR RELIEF".

    WHAT HAPPENED ABOVE THIS ORDER?

    Anonymous said...

    Ethanai murai kathinalum b.ed cs ikku puriyadhu
    Gunavathi ikku panam kodukka sonnal koduppargal
    "HOWEVER The PETITIONARS (652 ONLY)ARE FREE TO WORK OUT THEIR REMEDY IN TERMS OF THE JUDGEMENT DATED March 28th In CIVIL APPEAL No 3342"
    1880 _192=1668 post Yerkanave sila karanangalukku podapattadhu endru judgment il ulladhu
    High Court order koduthadhum exam eludha vendiyadhuthaney scourt ponadhu neengal thaan
    Nangal illai
    Indha cause il valukkatayam vaaindha aanai idhuvadharku enna reason endru kooda sonnargal judges
    Gunavathi christhuraj yen vaaye thirappadhillai endru yosithu par
    Panam pidungigal ungalai 2 govt iyum pagai aakki velai illamal seithuvitargal pavam panamum sambarithu vitanar
    652 per post I contempt podamal irundhal indha neram post irkku ouru vazhi koduthirukkum govt
    Thanaga man alli pottu kodeergale
    B.ed certificate I nallavargalaaga irundhal surrender pannu because thagudhi illadhavanidam padithadhu
    Kandippaga cause poduvom unnudaya b.ed selladhu endru

    Chirusthuraj yaridam b.ed padithar
    Elcot il velai seithavaridam
    Athuvum b.ed padikkadha candidate idam sindhithu parungal
    Ellorudaya b.ed um selladhu dhrigigaley ouru b.ed ilaadhavaridam sign vaanga koodhadhu endru andru puriyavillaya ungalukku
    Tamil B.lit padithavargal promotion il vandhaal avargalidam sign vaanga maataargal b.ed tamil padhithavar thaan sign poduvar idhu theriyamal neengal b.ed illai endru koovugireergale
    Kandippaga naan cause file pannuven ungal b.ed selladhu endru

    Anonymous said...

    11 months aaga unakku post poda vendiyadhuthaney 652 per idathil
    Thiramai irundhal panam koduthavadhu vandhirukkalam allava
    Or banumathi judgement koduthavudan exam eludha vendiyadhuthaney
    Ungal seniors eludha vida mattargal
    11 months unnai yen govt pogavilai endru

    Anonymous said...

    19.11.2009 judgement il ulla IA no 6 I padi puriyum(policy)
    IA no 6 THEY PRAYED FOR EXEMPTION FROM FILLING OFFICIAL TRANSLATION OF THOSE DOCUMENTS
    IDHU THAN POLICY NOTE IL ULLADHU

    Anonymous said...

    நாள் ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இளம் பி.எட் பட்டதாரிகளே எல்லா பாடங்களுக்கும் இப்படிதான் ஒருவரை வெளியே அனுப்பி ஒருவர் வேலைக்கு போகவேண்டும் என்று நினைக்கிறார்களா. இந்த கணினி பி.எட் ஆசிரியர்கள் மட்டும் ஏன் இப்படி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் இந்த 652 பணியிடம்தான் உள்ளதா. நீங்கள் வேண்டும் என்றால் புதுபணியிடம் கேளுங்கள். அரசு மட்டும் 652 பேரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் தலைமை ஆசரியர்கள், முதுகலை ஆசரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என் அணைத்து சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம். ஏன் ஒரு வருடம் பொறுத்து இருந்தோம் என்றால் வழக்கு இருந்த்தால் தான்.

    Anonymous said...

    சார் நான் ஒரு பி.எட் பட்டதாரி,நீங்கள் முறையான கல்வி தகுதிவுடன் தானே பதவிக்கு வந்து தற்போது தலைமை ஆசிரியராக உள்ளீர்கள் உங்களது பதவிக்கு தகுதி இல்லாத ஒருவன் போட்டிக்கு வந்தால் நீங்கள் உங்களது பதவிய விட்டு தருவிங்களா? ஓகே 652 பேருக்காக ஆர்பாட்டத்தில் இறங்குவோம் என்று அரசை மிரட்டுகீறிர்கள் உங்கள் மிரட்டல்கள் முதலமைச்சர் அம்மா அவர்களிடம் செல்லாது முடிந்தால் ஆர்ப்பாட்டம் செய்து பாருங்கள் வாழ்த்துக்கள் .

    Anonymous said...

    Thank you sir, we are all waiting for all teacher's association strike sir, you only know our pain sir, we were running court by court for the past one year, no remedy sir please like you and your association may help us for your strike sir.

    Anonymous said...

    Vocational post irku qualifications theriyuma
    Naangal ellorum b.ed illai endru thaney sonneergal
    Anaivarum manudhararai pol kalvi thagudhi petrullanar endru scourt sonnadhu theriyavillaya
    Thagudhi illadhavanidam yen b.ed padithaai
    Indha question irku yaravadhu answer pannungal parkkalam
    Vocational post irkku kodutha qualifications engalidam ulladhu
    Engalukku munbu ulla computer post il diploma computer kooda velai parkirargal
    But naangal pg qualification udan b.ed padithu (PGDCA)ullavargal kooda
    192 per employment il vandhal thagudhi udaiyavara
    Andha employment no engalukku yengey ponadhu
    Sindhithu par theriyum
    Unnudaya b.ed thagudhi illadhavanidam padityadhu endru neengal otthu kondal adutha nimidam indha post I vittu kodukirome
    Idharku neengal kattayamaga answer panninal thaan nee arivulla manithan
    Enhalukku go vil ulla qualification il thaan vandhome
    Court il qualification illai endra proof koduthirundhal paravayillai

    Anonymous said...

    Arasu palli thalamai aasiriyar galukku mikka nandri

    Anonymous said...

    Ungal b.ed selladhu endru kandippaga cause poduven
    B.ed padikkadha vargalidam sign vaangi padithullaye
    Neengal b.ed thagudhi endru koori ungalil ulla new b.ed cs padithavargalai adutha cause irkku ready pannugreergal
    Fresh b.ed cs candidate solgirargal
    Seniors b.ed selladhu endru
    B.ed illadha thagudhi attravargalidam padithavargal matrum elcot il pani seithavargalidam padithavargal in mel cause poduvom endru

    Anonymous said...

    IA no 6 I patri eludhi ullome adhai patri ellam eludha theriyavillai
    Avargaluku therndha ondru 652 per thagudhi atravar
    Ungal b.ed selladhu enbadhai indha padhivin keel otthu kondal neengal manasthan
    Voc post il 200 irkkum merpatta subject ulladhu ondrilum b.ed padithavarum ilaai
    Exam eludhi vandhavarum illai
    Naangal thaan thagudhi endru scourt matrum govt irkku theryum
    TRB exam eludhiyadhal engalukku first priority kanna
    652 members um velai ku ponaal thaan namakku velai endru un makkal yen b.ed face book il eludhi ullargal
    Nee engalai veliyil kondu vandhu enna saadhiththaai
    Neengalum andha idathirku poga villaye
    Naalai indha padhivirku keel ungal b.ed selladhu endru otthukkol

    Anonymous said...

    B.ed cs padithavargalukku voc post qulification now only understand
    naan eludhiyadharku badhil illaye

    avargal b.ed selladhu endru avargalil oruvarey cause poda pogirar
    voc post qualification enna endru therindhirukkumo

    Anonymous said...

    Yen tnkalvikku b.ed cs idam irundhu endha pidhiya padhivum kidaikavillayo
    Kootta thodar nadappadhal amaidhiyaga ullanaro
    652 per i velaiyillamal seidhu vittu neengal andha idathirku vandheergala sindhithu parungal
    ungal seniors velayil amarvadharku neengal panam kodhuthu yemariadhai ninaithu varuthapadugiren
    652 post irku nee yeppadi ninaithalum adhavdhu ( exam or seniority)vara mudiyadhu

    andha post 652 perukku mattum thaanada