1. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.
2. மாணவர்கள் சரளமாக வாசிக்கவும் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பினை அறிந்துகொள்ளவும், பிழையில்லாமல் படிக்கவும் தமிழ் பாடம் மிக முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே! அவ்வாறு இருக்கையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் தமிழ் பட்டதாரி ஆசிரியரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பணியமர்த்தலாமே!
3. தமிழ்நாட்டில் தமிழ் படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி இடங்கள் (மேலே கூறியவாறு கணக்கிட்டால்) மிகுதியாக இருந்த போதிலும் பணி வாய்ப்பு எப்போதும் மிகக் குறைவாக வழங்கினால் தமிழ் படிக்க எவர் வருவர்?
4. 1:35 என்ற விகிதத்தைப் பார்க்காமல் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களைப் பணியமர்த்தினால் அம்மாணவர்கள் மேல் வகுப்புகளில் (10,+2) மாணவர்கள் தற்போது உள்ளதைக் காட்டிலும் அதிக அளவில் தேர்ச்சி பெறுவர்.
5. வேலைவாய்ப்பும் வளம் பெறும்.
செய்தி : அரி கணேசு
July 30 nt psble papr 2 list becaus nt ready 4 lst only crctn wrk 4 wtg so frday cnfrm
ReplyDeleteமேல்நிலை பள்ளிகளிலும், உயர்நிலை பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணிடங்களை அதிக அளவில் கொண்டு நிறப்ப வேண்டும் அப்போது தான் " தமிழ்மொழி " வளர்ச்சி பெறும். இதனை அரசு கவனிக்குமா ? " அம்மா " நினைத்தால் நடக்கும் அதில் எந்த ஐயமில்லை
ReplyDelete