Pages

Tuesday, July 1, 2014

ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றம் உண்ணாவிரதம் இருக்க ஆசிரியர்கள் முடிவு

தமிழகம் முழுவதும் 4,587ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றப்பட்டதற்கு கண்ட னம் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசி ரியர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. 

சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருச்சி மாவட்ட செயலாளர் மகேஷ் வரவேற்றார். மாவட்ட பொரு ளாளர் மணிவண்ணன், மாநில செய்தி தொடர் பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலை வரும், நிறுவனருமான சம்பத் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில பொருளாளர் கார்த்திகேசன், மாநில தலைமை நிலைய செயலாளர் வேலுச் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
கூட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் 3 ஆண்டுக ளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக்கூடாது என்ற ஆணையை உடனே ரத்து செய்யவேண்டும். அரசு ஆணை எண் 137ன் படி அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் மாறுதல் நெறிமுறைகள் உள்ளடக்கி யது என்பதால் ஒட்டுமொத்தமாக 4,587 ஆசி ரியர் பயிற்றுனர்களுக்கும் மாறுதல் அளித்திருப்பது விதிக்கு புறம்பானது என்பதையும், இதனால் ஒவ் வொரு வட்டாரத்திலும் புதிய பணி இடத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை அரசுக்கும், கல்வித்துறைக்கும் தெரிவிப் பது, 1.1.2014ல் இருந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களுக் கும் உடனடியாக வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஆசிரியர் பயிற்று னர்களுக்கு 5 ஆண்டுக ளாக வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அகிம்சை முறையில் அனை த்து சங்கங்களையும் ஒன்றிணைத்து மாநில அளவில் சென்னையில் உண்ணாவிரதம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இணை செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.