Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 17, 2014

    பள்ளிகளில் தமிழ் நுழைய முடியாததற்கு என்ன செய்யப் போகிறோம்?- கவிஞர் வைரமுத்து

    'வேட்டி' விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, "தமிழ்நாட்டுக்குள் பல பள்ளிக்கூடங்களில் தமிழே நுழைய முடியவில்லையே, என்ன செய்யப்போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "வேட்டி கட்டிய நீதிபதி நிராகரிக்கப்பட்டது ஒரு நீதிபதியாக அல்ல என்று உயர்நீதிமன்ற அமர்வு கருத்துச் சொல்லியிருக்கிறது. நீதிபதியைக் கழித்துவிட்டாலும் அவர் ஒரு தனிமனிதர். அப்படியாயின் ஒரு தனிமனிதர் வேட்டிக் கட்டிச் செல்ல அங்கே அனுமதி இல்லை என்றாகிறது.
    தமிழ்நாட்டு எல்லைக்குள் ஒரு தனிமனிதரின் கலாச்சார உடையைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது அவர் உரிமையை மறுப்பதாகாதா? அந்த மாண்பமை நீதியரசரின் பெயர் ஹைரிபரந்தாமன். இதிகாசத்தில் பாஞ்சாலிக்கே உடைதந்து மானங்காத்த பரந்தாமனுக்கு இந்த நாளில் அவர் உடுத்திய உடைக்கே உத்தரவாதம் இல்லையா என்ற இலக்கியக் கவலை எங்களுக்கு நேர்கிறது. இது குறித்து உரக்கக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சி அன்பர்களையும், உறுதியான முடிவெடுத்த தமிழக அரசையும் பெரிதும் பாராட்டுகிறோம். நெய்யப்பட்ட ஒரு வேட்டியின் நூலைப் பிரித்தால் தமிழர்களின் ஈராயிரம் ஆண்டு கலாச்சார நீளத்தை அது காட்டும். உடுத்தல் என்பது பண்பாடு. உடை என்பது நாகரிகம். தமிழன் தன் தட்வெப்பத்திற்கு கண்டுபிடித்த நாகரிக உடைதான் வேட்டி. திராவிடக் கலாச்சாரத்திற்கு வேட்டி நாகரிகப் பங்களிப்பை முதலில் தந்தவன் தமிழனாகத்தான் இருக்க முடியும் என்று கருத இடமிருக்கிறது. தறியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதுதான் வேட்டி; துணிக்கப்பட்டது துணி; அறுக்கப்பட்டது அறுவை; துண்டாக்கப்பட்டது துண்டு. வெட்டு என்ற என்ற வினையடியாகப் பிறந்த தனித் தமிழ்ச்சொல் என்பதனால் தமிழன் கண்டுபிடித்ததுதான் வேட்டி என்று ஆதாரத்தோடு அறியலாம். அதை உடுத்தல் என்பது ஒரு வடிவத்தில் இல்லை. ஆனால், கலாச்சார வரலாற்றில் வேட்டி என்பது கிழிந்து போவதில்லை. வேட்டியின் பன்முகத் தன்மையைக் கருதிப் பார்த்தால் வேட்டி கண்டவன் ஒரு சமூக விஞ்ஞானி என்றே கருதத் தோன்றுகிறது. ஆடையாக - போர்வையாக - விரிப்பானாக - தலைப்பாகையாக - துண்டாக - தூளியாக - பாம்புக்கடிக்கு முதலுதவிக் கட்டும் துணியாக - கிழந்த பிறகும் கோவணமாக - துடைப்பானாக - இன்னும் கிழந்தால் திரியாக என்று பண்பாடு முழுக்கப் பயணப்பட்டு வருவது வேட்டியாகும். இதை ஒரு சுண்டைக்காய்ப் பிரச்சினை என்று சுண்டி எறிய முடியாது. ஒரு மூங்கில் காட்டையே எரிக்கும் நெருப்பு ஒரு பொறியில் இருந்துதான் தொடங்குகிறது. அந்தப் பொறியைத் தமிழ்ச் சமூகம் அணைந்திருக்கிறது. இதற்குக் குரல் கொடுத்த அனைவரையும் கும்பிடுகிறோம். வக்கீலுக்கும், நீதிபதிக்குமே வக்காலத்து வாங்குகிற நீ வேட்டி கட்டுகிறாயா என்று என்மீது ஒரு விமர்சனம் வீசப்படலாம். என்னைப் பொருத்த அளவில், என்னை ஒரு வேலைக்காரனாகக் கருதிக்கொள்ளும் இடங்களிலெல்லாம் வேறு உடை அணிகிறேன்; விடுதலை உணர்வு வேண்டும் போதெல்லாம் வேட்டி மட்டுமே அணிகிறேன். இப்போது எனக்குள்ள கேள்வியெல்லாம் ஒன்றுதான். ஒரு விளையாட்டு மன்றத்துக்குள் வேட்டி கட்டியவர் நுழைய முடியவில்லை என்று வெடித்துக் கிளம்பினோமே - தமிழ்நாட்டுக்குள் பல பள்ளிக்கூடங்களில் தமிழே நுழைய முடியவில்லையே, என்ன செய்யப்போகிறோம்? அதிகாரமிக்கவர்கள் ஆவன செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்று வைரமுத்து கூறியுள்ளார்.

    No comments: