Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 17, 2014

    எள்ளளவு பயன் உண்டா?

    18,000 ஆசிரியர்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப் படும்-பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி வீரமணி. 20,000 ஆசிரியர்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப் படும்-தினத்தந்தி போன்றவை பலர் வயிற்றில் பால் வார்த்த செய்திகள். ஆனால் அடுத்த இரு தினங்களிலேயே 10762 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியாகி பலர் வயிற்றில் புளியை கரைத்தது.இதற்கு விதிவிலக்கு வரலாறும் புவியியலும்.

    மற்றத் துறைகளான தமிழ், கணிதம் மற்றும் அறிவியலின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பெருஞ் சோர்விற்கு ஆளாகினார்கள் .தாள் 1 க்கான காலிப் பணியிட விவரம் இன்னும் வெளியாகததால் அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் பயத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
    தாள் 1 க்கான காலிப் பணியிட விவரம் வெளியிடுவதில் ஏதோ சிக்கல் இருப்பதாக தெரிகிறது.மாநில பதிவு மூப்பு பயன்படுத்தப்படுமா அல்லது TRB அறிவித்த படி weightage முறையை மையமாகக் கொண்டு பணிநியமனம் செய்யப்படுமா என்பதில் சிக்கல் இருக்கலாம்.தாள் 1 க்கான வழக்கு நிலவரம் குறித்து எதுவும் நம் கவனத்திற்கு வருவதில்லை.எதுவானாலும் விரைவில் தெரிய வரும்.
    இன்றைய நாள் கல்வி மானியக் கோரிக்கை வருவதையொட்டி காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நிமிடமும் வருங்கால ஆசிரியர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.கல்வி மானியக் கோரிக்கையில் ஏதேனும் காலிப் பணியிடம் அறிவிக்கப் பட மாட்டாதா? ஏதேனும் அதிர்ஷ்ட தேவியின் கடைக் கண் பார்வை விழாதா? என்பது போன்ற ஏக்கம்.
    இறுதியாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சி 3459 ஆசிரியப் பணியிடங்கள் 2014-2015 ஆம் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று வெளியாகி ஒரு சிறு புன்முறுவலை நம் மத்தியில்உண்டாக்கியுள்ளது.
    இப்பொழுது நடைபெறுவதுதான் 2014-2015 கல்வியாண்டு.எனவே இந்த 3459 காலிப் பணியிடங்களும் நம்மைக்கொண்டுதான் நிரப்பப்படும்.அவ்வாறு நிரப்பவில்லையென்றால் TRB குறிப்பிடும் தகுதியான ஆசிரியர்கள் கையிலிருந்தும்(நாம் தான்) இந்த கல்வியாண்டு முழுவதும் ஆசிரியர் இல்லா பள்ளிகளாகவே அரசு பள்ளிகள் இயங்கும்.
    இந்த 3459 காலிப் பணியிடங்களில் தாள் 1, 2 மற்றும் PG க்கு எவ்வளவு பணியிடங்கள் என்பதும் தாள் 2,PG யில் பாட வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் என்பதும் அமைச்சர் கே.சி வீரமணி அவர்களுக்கும்,இறைவனுக்கும் மட்டுமே அறிந்த ரகசியம்.
    இது போக சென்னை,கோவை,மதுரை போன்ற மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள்,ஆதிதிராவிட,பிற்படுத்தப் பட்ட,பழங்குடியின சீர்திருத்த வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளின் காலிப் பணியிடமும் நம்மைக் கொண்டே நிரப்பப் படும் என்றாலும் இத்துறைகளின் கீழ் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன,அவற்றில் எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளது என்பதும் ஊமையன் அறிந்த ரகசியம்
    அரசியல்வாதிகள்.
    நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றது என்ற காரணத்திற்காக 5% தளர்வு வழங்க வேண்டும் என்று அத்தனை கூப்பாடு போட்ட அரசியல்வாதிகள், அவர்கள் வாதிட்ட அதே 5% தளர்வினால் தேர்ச்சிப் பெற்றோருக்கு இப்போதைய நிலவரப் படி எள் முனையளவு கூட புவியியலைத் தவிர ( விரல் விட்டு என்னும் எண்ணிக்கையில் மட்டுமே பயன்) மற்றத் துறையினருக்கு பயனில்லை என்பதை அறிந்தார்களா? அல்லது அதை அறிந்தும் அவர்களும் உண்மையிலேயே பயனடைய வேண்டும் என்ற நோக்கில் ஏதாவது குரல் கொடுத்தார்களா? இன்று நடைபெறுவது கல்விமானியக் கோரிக்கை இதனுடைய நோக்கமே அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதும் பள்ளிகளை தரம் உயர்த்துவதுமே என்று தெரிந்தும் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து போனார்கள்.ஒருவர் கூட ஆசிரியர் அல்லது அரசுப் பள்ளி என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை.ஏனென்றால் அடுத்தத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறதே!
    அன்புடன் மணியரசன்.

    1 comment:

    Anonymous said...

    Yes sir... 65,000member ku aappu vaichutanga pas panalum no job... Yesterday no use.. Only opopite katchi veliyetram.. Pavam 5relaxation ematritangj