Pages

Tuesday, July 29, 2014

பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய அரசு அலுவலகங்களில் அமுல்

மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தும்படி, அந்தத் துறையின் அமைச்சர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், வெங்கையா நாயுடு. இவர் நேற்று தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, பல நாற்காலிகள் காலியாக இருந்தன.
கிட்டத்தட்ட, 80 ஊழியர்கள் அவர்களின் இருக்கையில் இல்லை.இதையடுத்து, அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன அல்லது இருக்கையில் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அத்துடன் தன் கட்டுப்பாட்டில் உள்ள, நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை, உடனே அமல்படுத்தும்படியும் தெரிவித்தார்.மேலும், 'அலுவலகத்திற்கு யார் யார் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனர்; யார் வருவதில்லை என்பதை, அவ்வப்போது, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அலுவலகம் துவங்கி, 15 நிமிடங்களுக்குள் வராதவர்களை, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது. தாமதமாக வருபவர்களை, பணிக்கு வரவில்லை என, கணக்கிட்டு, சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும்' என்றும் ஆணையிட்டார். சில வாரங்களுக்கு முன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், இதேபோல், தன் அமைச்சகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில், திடீர் சோதனை மேற்கொண்ட போது, 40க்கும் மேற்பட்டோர், சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் இருந்ததை கண்டார். உடன், அவர்களுக்கு தற்காலிக விடுமுறை கொடுக்கும்படி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக் முதலில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில் அமலாக உள்ள, பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மற்ற அமைச்சகங்களின் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களிலும் அமலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

3 comments:

  1. முதலில் தொடக்கக்கல்வி துறையில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை வர வேண்டும்.

    ReplyDelete
  2. Dharmapuri district ku biometric method kondu varavendum. All schools and offices

    ReplyDelete
  3. Dear Friends,

    As per the notification vacancy list of all category have got some clue except MINORITY languages. Friends suggest!!!!!

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.