நடப்பாண்டு ஆங்கிலவழி துவங்கப்பட்ட பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கு புலமைமிக்க ஆங்கில ஆசிரியர்கள், எளிய முறையில் ஆங்கில பயிற்சியை வழங்கினர்.
தமிழக அரசு, மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக தமிழ்வழி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து முப்பருவ கல்வி திட்டத்தை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் அக மற்றும் புற மதிப்பீட்டின் கீழ் மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த 2011 முதல் தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும் தலா ஐந்து ஆங்கில வழி பள்ளிகள் துவங்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழித்திட்டம் கடந்த கல்வியாண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் ஆங்கில வழி படிக்கும் மாணவர்கள், ஆங்கில புலமை பெற்றவர்களாக இல்லை. அதற்கு முக்கிய காரணமாக ஆசிரியர்கள் ஆங்கில புலமையுடன் பாடம் எடுப்பதில்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்ட 165 ஆங்கிலவழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்து.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், முகாமை துவங்கி வைத்து ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்வது குறித்த தகவல்களை ஆங்கில ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறினார். ஆங்கில புலமைமிக்க ஆசிரியர்கள் வேதராஜ் பால்சன், ராஜேஷ் ஆகியோர் மற்ற ஆங்கில ஆசிரியருக்கு எளிய முறையில் மாணவருக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது குறித்து பயிற்சி வழங்கினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.