Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 9, 2014

    இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு

    கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.இதனால், இந்த கல்வியாண்டு மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும். படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பி.எட்., படிப்பிற்கு, இந்த கல்வியாண்டில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, வெறிச்சோடிய பல கல்வியியல் கல்லுாரிகளிலும், தற்போது மாணவ, மாணவியரின் கூட்டம் அலை மோதுகிறது.

    4 comments:

    shanmugam said...

    Govt job ethirparkama Matric school la work panna ready na BEd join pannunga ila PG,PHd nu join pannikonga thts better to get teaching job in colleges,polytecnics etc..Before joining BEd concern ur +2,UG % also becoz any govt whthr AIADMK or DMK n future cannot avoid weightage in new appoinment.

    C.Sugumar said...

    திரு சண்முகம் அவர்களே ஏன் இப்படி தமிழையும் ஆங்கிலத்தையும் பிசைந்து எழுத வேண்டும். வலைதளத்தில்NHM software free - உள்ளது. தரவிரக்கம் செய்து கொண்டால் alt4 சொடுக்கி தமிழல் எழுதலாம். இல்லையேல் ஆங்கிலத்தில் முழுமையாக எழுத வேண்டும்.ஆங்கிலத்தை முழுமையாகப் படியுங்கள்.பின் எழுதலாம்.

    C.Sugumar said...

    பி.எட் படிப்பிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.வேலை வாய்ப்புள்ளது. போட்டி தோ்வு மூலம் வேலைவாய்ப்பு என்பது உறுதியாகி விட்டது.தகுதியிருந்தால் உடனே அரசு வேலை என்ற அற்புத வாய்ப்பு பெற்றவர்கள் பிஎட் பட்டதாாிகள்.எனவே பிஎட் கல்லூாி நியமனத்தை முறைப்படுத்த வேண்டும். தகுதித் தோ்வுநடத்தி குறைந்த பட்ட மதிப்பெண் எடுத்தவர்கள்தாம் பி.எட் கல்லூாியில் சேர முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.ஆசிரியா்களின் கல்வித்தகுதி மிக உயர்ந்ததாக இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    shanmugam said...

    C.sugumar sir i can able to type 100% in english.But noone ready to read our comment also 50% of readers wont understand so only i am typing in tam-english.Also i am reading this article via mobile so i cant able to type with type letters.