Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 5, 2014

    அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் "நியமிக்கப்படுவதில்லை" என்ற கருத்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

    இந்தக் குறையை நீக்க ஒரு நீண்ட நெடிய பயணத்தை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வினை மாநில அளவில் நடத்த ஆரம்பித்து, ஆசிரியர்கள் பாட வாரியாக தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். பின்னர் வந்த அரசு அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களையும், கால முறை ஊதியத்தை ஒழித்து பணி நிரந்தரம் செய்தது.


    அதன் பின்னர் பணி மூப்பின் மூலமாக வேலை வாய்ப்பகத்தின் வாயிலாக ஆசிரியர்கள் சிறிது காலம் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன் பிறகு மத்திய அரசின் உத்தரவு மற்றும் கட்டாயக் கல்விச் சட்டப்படி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவித்தது.அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வின் வாயிலாகவே நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    தேர்வு முறை மிகக் கடுமையானது.வினாத்தாள் கடினமாக இருக்கும் என்பதை தகுதித் தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர் விழுக்காட்டினை வைத்தே சொல்லிவிடலாம்.

    அரசுப் பள்ளிகளில் இப்போதிருக்கிற இளம் ஆசிரியர் படை கணினி, ப்ரொஜக்டர், இணையமெல்லாம் பயன்படுத்தத் தெரிந்த படை. எல்லா தகவல்களையும் தேடி வந்து மாணவர்கள் முன் கொட்டுகிறார்கள்.
    மாணவர்களின் சூழலுக்குத் தக்கவாறு தனியார் பள்ளியில் முன்பே பணியாற்றியிருந்தாலும், அரசுப் பள்ளிக்கு வந்தவுடன் தங்களை மாற்றிக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்கள்.

    அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவதே இதற்கு சான்று.

    1 comment:

    Anonymous said...

    you are absolutely correct. but in elementary edn dept.sincere teachers are forced to do malpractices like forgery attendance.if anyone oppose ,they will be named as criminals