Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 19, 2014

    ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு

    சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்துக்குள் வேட்டி அணிந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து சட்டசபையிலும் எதிரொலித்து, இப்போது முதல்– அமைச்சர் ஜெயலலிதாவே நடவடிக்கை எடுக்கும் கட்டத்துக்கு சென்றுவிட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஆடை க ட்டுப்பாடு என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. சில பல பணிகள் நிமித்தம் சீருடை அல்லது ஆடை கட்டுப்பாடு என்பது காலம்காலமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    அந்தந்த பணிக்கேற்ப நிர்ணயிக்கப்படும் இந்த ஆடைகளை அணிந்தால்தான் அந்த பணியும் சிறக்கும், அதை ஆற்றுவதற்கும்உறுதுணையாக இருக்கும். மேலும், அந்தந்த பணிக்கேற்ற அடையாளம் நிச்சயம் தேவை. அந்த உடையை அவர்கள் அணிந்துவந்தால்தான் ஒரு தனித்துவம் தெரியும். இந்த உடைகளை அவர்கள் அணிந்து வரும்போது அந்த உத்தியோகத்துக்குரிய ஒரு கம்பீரம் தானாகவே வரும். இவ்வாறு சீருடை நிர்ணயிக்கப்படாத பணிகளில், எந்த உடை அணிய வேண்டுமானாலும் அணியலாம், ஆனால், அந்த பதவிக்கேற்ற, பணிக்கேற்ற கவுரவத்துக்கு உகந்த ஆடைகளையே அணியவேண்டும் என்பது எழுதப்படாத நியதியாக உள்ளது. எங்களுக்கு சீருடை இல்லை என்று சொல்லிக்கொண்டு எந்த உடையை அணிந்துவேண்டுமானாலும் வரலாம் என்ற நடைமுறைதமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் பிளஸ்–2 வரை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசே இலவச சீருடைகளை வழங்குகிறது.தனியார் பள்ளிக்கூடங்களிலும் அவர்களே மாணவர்கள் எந்த சீருடை அணிந்து வரவேண்டும் என்று நடைமுறைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தகைய சீருடைகள் நடைமுறையில்உள்ளன. ஆனால், கனடா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற சில நாடுகளில் மட்டும் சீருடையோ, ஆடை கட்டுப்பாடோ இல்லை. அமெரிக்காவில்கூட பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் சீருடை இல்லை. தேவையில்லாதகட்டுப்பாடுகளை இளம் மாணவப்பருவத்தில் திணிக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து அங்கு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூட படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிகளுக்குள் நுழைந்தவுடன் யூனிபாரம் அல்லது சீருடை என்று தனியாக இல்லை. ஆனால், பல கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். இப்போது மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்துவர வேண்டாம், சட்டையை பேண்டுக்குள் இன் பண்ணி, காலில் ஷூ அணியவேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. இதுபோல, மாணவிகள் சேலை,சல்வார் கமீஸ் அல்லது சுரிதார் அணிந்து வரவேண்டும், தலைமுடியை கட்டிக்கொண்டு வரவேண்டும், நிறைய நகைகள் போட்டுக்கொண்டோ, பூ வைத்துக்கொண்டோ வரக்கூடாது, மோதிரம் அணியக்கூடாது என்றெல்லாம் எழுதப்படாத விதிகளாக நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை மருத்துவ கல்லூரி மாணவர்களும் பெருமையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இங்குமட்டுமல்ல, என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்லூரிகளிலும், அனைத்து கலைக்கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு இல்லாததால், சில பள்ளிக்கூடங்களில் குறிப்பாக கிராமப்புற பள்ளிக் கூடங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட ஆடைகளை சர்வசாதாரணமாக அணிந்துவருகிறார்கள் என்றும், ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பல ஆடை கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், பணிக்கு சேர்ந்தபிறகு பெரும்பாலானோர் கடைப்பிடித்தாலும், சிலர் கடைபிடிப்பதில்லையே என்றும் கூறுபவர்களால் ஆசிரியர்களுக்கு சீருடை தேவையில்லை, மாறாக அவர்கள் அணியும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. ஆசிரியர்கள் ஆடை அணியும் முறைதான், எதிர்காலத்தில் மாணவர்கள் பின்பற்றவும் வழிவகுக்கும். குஜராத் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சீருடைபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீருடை தேவையில்லை, அதற்கு பதிலாக இன்னென்ன ஆடைகளைத்தான் அணியலாம், அதை இந்தெந்த வகையில்தான் அணியலாம், மாணவர்களைவிட வேறுபடுத்தி இருக்கும் வகையில், ஆசிரியர் பணியே அறப்பணி என்றுகூறுவதற்கேற்ற வகையில், அந்த பணியின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடை கட்டுப்பாடு கொண்டுவரலாம் என்ற கோரிக்கையை பள்ளிக்கூட கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும

    3 comments:

    KALVI said...

    சீருடை வந்தால் நலம் தான்

    Anonymous said...

    Nalla seithi viraivil uthaiyamagattum.

    Anonymous said...

    pallu irrukiravan pattani thingiran , ungallukku emba jealousy.