உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங், ஜுலை 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், தமிழகம் தழுவிய பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதைப்போல் இந்தாண்டு பொறியியல் கவுன்சிலிங், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் தொடங்கியது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில்தான், அதிகரிக்கப்பட்ட பொறியியல் இடங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானது. இதையடுத்து, ஜுன் 27ம் தேதி முதல் தொடங்குவதாக திட்டமிடப்பட்ட பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, பொதுப்பிரிவு கவுன்சிலிங், ஜுலை 7ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொழிற்பிரிவு கலந்தாய்வு, ஜுலை 9ம் தேதி தொடங்குகிறது.
எந்தெந்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு, எந்த நாளில் கவுன்சிலிங் நடைபெறும் என்ற விபரம், விண்ணப்பித்த மாணவர்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜுலை 7ம் தேதி துவங்கும் கவுன்சிலிங், ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும் மற்றும் காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும் என்று அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ள www.annauniv.edu என்ற வலைதளம் செல்லவும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.