பிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் யூனியனுக்கு உட்பட்ட சின்னபேள கொண்டப்பள்ளி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுகுணா. 1985ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்ச்சி பெற்ற இவர், பிளஸ் 2 படிக்காமல் 1987ம்ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தார்.
பின் இடைநிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்ட சுகுணா, ஓசூர் அடுத்த கெலமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட துவக்கப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.அதை தொடர்ந்து 1995ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இடமாறுதல் கவுன்சலிங் மூலம் ஓசூர் அருகே நல்லூர் டவுன் பஞ்சாயத்து துவக்கப்பள்ளிக்கு சென்றார்.அங்கிருந்து 2003ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, ஓசூர் அருகே உள்ள பூதினத்தம் துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஓசூரை அடுத்த அனுமந்தாபுரம் நடுநிலைப்பள்ளிக்கு சென்றார்.இந்நிலையில் முத்தாலி டவுன் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம்உயர்த்தப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த ஆஞ்ஜநேயரெட்டி என்பவர் உயர்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருக்க மறுத்து விட்டார். இதனால், தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சுகுணா, அனுமந்தாபுரம் டவுன்பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளிக்கு ஆஞ்சநேயரெட்டிக்கு மாற்றப்பட்டார்.இதனால், ஆசிரியர் சுகுணா சின்னபேளகொண்டப்பள்ளி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியலின்படி சுகுணாவுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு ஜூனியரான ஆசிரியர் சுரேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு விளக்கம் கேட்ட சுகுணாவிடம் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெறாததால், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சுகுணா வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சிக்கு பின் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றதால், அதை பிளஸ் 2 மேல்நிலை கல்வியாக கருத வேண்டும் என கடந்த 24 ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் சுகுணாவுக்கு ஓசூர் குமுதேபள்ளி டவுன் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
Ethume padikka vendam velai kidaikkumam
ReplyDeletethotakkak kalvithuraiyil ellam saathiyamaakum
ReplyDelete