Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 11, 2014

    மறுகூட்டலில் 12 மதிப்பெண் கூடுதல் - மாநில அளவில் மதுரை மாணவி மூன்றாமிடம்

    பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மறுகூட்டலில், மதுரை மாணவி செர்ரி ரூத், 12 மதிப்பெண் கூடுதலாக பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.


    மதுரை மாவட்டத்தில், 10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு, 521 பேர் விண்ணப்பித்தனர். இதில், 485 மதிப்பெண் பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி செர்ரி ரூத், தமிழ் பாடத்திற்காக விண்ணப்பித்தார். மறுகூட்டலில், 27 பேருக்கு மதிப்பெண்கள் அதிகரித்தன.

    இதில், செர்ரி ரூத்திற்கு, 12 மதிப்பெண் அதிகரித்து, அவரது மொத்த மதிப்பெண், 497 ஆனது; இது, மாநில அளவில் மூன்றாவது ரேங்க். மாணவியை பள்ளி தலைவர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    மாணவியின் தந்தை, மத்திய கலால் மற்றும் சுங்கவரி இன்ஸ்பெக்டர் விக்டர் தனராஜ் கூறியதாவது: தமிழ் பாடத்தில் முதல் தாளில், 98, இரண்டாம் தாளில், 73 மதிப்பெண் பெற்றார். பின் மறுகூட்டலில், இரண்டாம் தாளில் மட்டும், 25 மதிப்பெண் கூடுதலாக பெற்றதால், தமிழில், 98 மதிப்பெண் பெற்றுள்ளார். இதன்மூலம் மாநில ரேங்க் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

    மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "சம்பந்தப்பட்ட மாணவியின் மொத்த மதிப்பெண், 497 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மூன்றாவது ரேங்க் என்பதை, கல்வி இயக்குனர்தான் அறிவிக்க வேண்டும்" என்றார்.

    No comments: