Pages

Thursday, July 24, 2014

போலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்

போலி கல்விச் சான்றிதழ், தகுதியற்ற ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பிகார் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, கல்வித்துறை அமைச்சர் பிரிஷன் படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


மேலும் அவர் பேசியது: ""தகுதியற்ற நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதில் 147 கிராமத் தலைவர்கள் மற்றும் 27 பஞ்சாயத்து ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீதான நடவடிக்கை தொடங்கி விட்டது. இது தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன'' என்றார். முன்னதாக, நிதீஷ் குமார் ஆட்சியின்போது ரூ.3,000 ஆயிரம் தொகுப்பூதிய திட்டத்தின்கீழ் பள்ளிகளில் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.