அரசுப்பள்ளி மாணவர்கள், சதுரங்க ஆட்டத்தில் திறன்களை பெறுதல் நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளி மாணவர்களும் செஸ் போட்டிகளில் பயிற்சி பெறுதலை ஊக்குவித்து வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.06.2014) சதுரங்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். ஆசிரியர் திருமுருகன் வரவேற்புரை நல்கினார். “கற்றலில் மேம்பாடு அடைய உதவும் சதுரங்கம்” என்ற தலைப்பில் ஆசிரியைகள் அமுதா, அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் பேசினர். முகாமில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சதுரங்க பயிற்சியாளர் கணேஷ் மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றியும் குறியீடுகளைப் பயன்படுத்தி பணித்தாள் (WORK SHEET) எழுதும் முறை பற்றியும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். பள்ளியின் செஸ் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார். இறுதியில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.