பணி இடமாறுதல் கலந்தாய்வு வெறும் கண்துடைப்புகாக மட்டுமே நடப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கல்வி ஆண்டு முடிவில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒளிவு மறைவற்ற முறையில் எந்த பள்ளியில் காலிப்பணியிடம் உள்ளது என்ற விபரம் தெரியப்படுத்த வேண்டும்.
கலந்தாய்வு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் காலிப்பணியிட விபரம் ஒட்டப்பட வேண்டும்.
பணம் பெற்றுக்கொண்டு இடமாறுதல் செய்வது உள்ளிட்ட முறைகேடு நடக்காமல் இருப்பதற்காக பொதுமாறுதல் கலந்தாய்வு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த கலந்தாய்வு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக பொதுகலந் தாய்வின் போது இல்லாமல், நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பிற மாதங்களில் முறைகேடான வகையில் இடமாறுதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இன்றுமுதல் துவங்க உள்ளது. ஆனால் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது நடக்க உள்ள கலந்தாய்வு வெறும் கண்துடைப்பே என புகார் எழுந்துள்ளது.
தமிழக தமிழாசிரியர் கழக மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிர்வாக ரீதியான இடமாறுதல் பெற்றுள்ளனர். இவ்வாறு இடமாறுதல் அளித்துவிட்டு வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கல்வித்துறையில் ஒரு இடமாறுதலுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை பெற்று கொண்டு நிர்வாக இடமாறுதல் செய்யப்படுகிறது.
இதனால் நியாயமான முறையில் மாறுதலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் நிர்வாக மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.
It is 100% True.viraivil nirvaga maruthalil centavarkalum maruvarkal. Tharmathin Vaalvuthanai Soothu Kaviullarhu.
ReplyDeleteDefinitely sir...3 and 4 laks kuduthu madurai tranfr vandhavanga elarum ippo surplus..so they lost their money...aduthavanga placa kasu kuduthu adichu vanguna idhan nadakum.so undrstand all teachers..
ReplyDeleteIn dharmapuri dt spot place la block pani counselling nadakuthu in elementary ithuku per general transfer counselling...
ReplyDeleteNalla muyarchi. Take action against this shit.
ReplyDeleteYar sir action eduppanga?. Ellarum bayandhu odaranga.. yennu ketta avanga schoolkku visit varuvangalam. Varattume.. nee ozhunga irundha yen bayappadanum?.?????....
ReplyDelete