Pages

Friday, June 20, 2014

மாவட்ட மாறுதல் பெறுவோர் கவனத்திற்கு!!!

மாவட்ட மாறுதல் வேண்டுவோர்க்கு தாங்கள் பகிறும் இந்த தகவல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். SSTAவின் மிகப் பெரிய போராட்டத்தால் உச்சநீதிமன்றம் வரை சென்று கடந்த ஆண்டு மாவட்ட மாறுதல் தடை ஆணையை தகர்த்து எறிந்தது, அது மட்டும் இல்லாமல் மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு நற்செய்தியாக தொடக்கக் கல்வித் துறையின் வரலாற்றில் முதல் முறையாக SSTAவின் தொடர் முயற்சியால் இணையதளம் வழியாக மாவட்ட மாறுதல் நடைபெற இருக்கிறது.
அன்று மாவட்ட மாறுதல் என்றால் ஒரே ஒரு மாவட்டத்தை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும், ஆனால் இன்று பத்து மாவட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமாக மாற்றி மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரித்து எந்த மண்டலம் வேண்டுமோ அந்த மண்டலத்தில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்டத்தை தேர்வு செய்யலாம், இதனால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் அடைவர், ஏற்கனவே மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தாலும் புதிதாக கிடைக்கும் விண்ணப்பத்தையும் நிரப்பி இன்று (20.06.2014) மாலைக்குள் AEEO அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு வேண்டுகிறோம். இது SSTA ஏற்படுத்திய பொன்னான வாய்ப்பு தவறவிடாதீர்கள். விரைவில் தாங்கள் விரும்பிய இடம் கிடைக்க வாழ்த்துக்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளலாம் 9786173873,9942430990. 

2 comments:

  1. Salary ennachi sg tr

    ReplyDelete
  2. SIR VACANT DISTRICT WISE PUBLISH PANA ARRANGE PANANUM, Tirunelveli, kanyakumari teachers ku usefula irukum




    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.