Pages

Thursday, June 26, 2014

"அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்லுவது அரசுப் பள்ளிகளே"

"அரசு பள்ளிகள் தான், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது" என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் தெரிவித்தார். கரூரில் நடந்த ரோட்டரி கிளப் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் பேசியதாவது:


அரசு பள்ளிகள் தான், ஏழை மக்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. அரசு பள்ளிகள் தான் அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்கிறது. கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். எதற்காகவும் நம்முடைய தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. நம்முடைய பெயர், கையெழுத்தைக் கூட தமிழில் எழுத தயங்கி வருகிறோம்.

நாட்டின் ஜீவன் கிராமங்களில் தான் உள்ளது. அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டுவிடும் சூழல் உள்ளது. கடந்த 1999-2006ம் ஆண்டுகளில் தேசிய அளவில் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

கிராமங்களின் முன்னேற்றத்துக்கும் மற்றும் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும் உதவி செய்ய வேண்டும். இதற்கு சமூக அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சகாயம் பேசினார்.

விழாவில், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.