திருவண்ணாமலை,
:அரசு பள்ளிகளில் ஓவியம், இசை, விளையாட்டு
போன்றவற்றுக்கான சிறப்பு பாட ஆசிரியர்களை,
மாதம் ரூ.5 ஆயிரம்
தொகுப்பு
ஊதியம் என்ற அடிப்படையில் கடந்த
2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும்
தமிழக அரசு நியமித்தது. அதன்படி,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 944 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு
பணிபுரிந்து வருகின்றனர்.
குறைவான
ஊதியத்தில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், நீண்ட
தொலைவில் உள்ள பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டதால்
சிக்கல் ஏற்பட்டது. எனவே, மனமொத்த மாறுதல்,
விருப்ப மாறுதல் என்ற அடிப்படையில்,
அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு பெரும்பாலானவர்கள்
பணியிட மாறுதல் பெற்றனர். மாற்றுப்பணி
என்ற நிபந்தனையுடன் புதிய பணியிடங்களில் கடந்த
இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில்,
2014 -2015ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள்
தொடங்கப்படும் வரும் 2ம் தேதியன்று,
சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் முதலில் பணிநியமனம் செய்யப்பட்ட
பள்ளிகளில் பணிக்கு சேர வேண்டும்
என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட
சிறப்பாசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான
விதிமுறைகள் இல்லை.
எனவே, ஏற்கனவே தற்காலிகமாக வழங்கப்பட்ட
பணியிட மாறுதல் உத்தரவு ரத்து
செய்யப்படுகிறது. எனவே, மாறுதல் பெற்று
வேறு பள்ளிகளில் பணிபுரிந்த சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும்,
பழைய பள்ளிகளில் வரும் 2ம் தேதியன்று
பணியில் சேர வேண்டும். அதற்கான
அறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மூலம் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு
அனுப்பி வைக்க வேண்டும் எனவும்
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.