தெளிவு பெற போகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் சில தகவல்கள் நம்மை மீண்டும் குழப்புகிறது.
குழப்பம் 1
இந்த வாரத்தின் இறுதிக்குள் தரவரிசைப் பட்டியல் அல்லது தேர்வு பட்டியல் வெளியாகவிருக்கிறது.இது கிட்டதட்ட உறுதிபடுத்தப் பட்ட செய்திதான்.
இது வரவேற்க வேண்டிய செய்திதானே என்று நினைக்கலாம்.
ஆனால் பள்ளிக்கல்வி துறையிடமிருந்து TRB க்கு இதுவரை காலி பணியிடம் குறித்த தகவல் சென்று சேரவில்லை.அதோடு பள்ளிகல்வித் துறைக்கான Surplus இந்த மாத இறுதிவரை நடைபெறுகிறது. Surplus முடிந்த பின்புதான் காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிய வரும்.எனவே வெளியாகும் பட்டியல் தரவரிசை பட்டியலாக இருந்தால் நிம்மதி பிறக்கும்.
குழப்பம் 2
இந்த ஜூன் மாதத்தோடு தொகுப்பூதிய ஆசியர்களுடனான ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆனால் அடுத்த 3 மாதங்களும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தெரிகிறது.இறுதிப் பட்டியல் வெளியாகும் வேளையில் அவர்களை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க செய்வதின் மர்மம் என்னவோ?
குழப்பம் 3
PG, BT ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாகத்தான் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன.ஆரம்பம் முதலே SG ஆசிரியர் நியமனம் குறித்து சர்ச்சை எதுவும் இல்லை.ஆனால் "இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது" என தினமணி எழுதியிருப்பது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை.
புது குழப்பம்
"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.-இது செய்தி
கடைசிவரை ஓய்வு பெற்றவர்களை கொண்டே பள்ளியை நிர்வாகம் செய்து கொள்ளலாமே பிறகு எதற்கு TET தேர்வை நடத்தீனீர்கள்? என்பது என் கேள்வி.
சிறு விளக்கம்
வரும் 20 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.அப்போராட்டம் குறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் TET மதிப்பெண்ணிற்கு 60% லிருந்து 85% மாக உயர்த்துவதே போராட்டத்தின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் காவல் துறை ஆணையரிடம் அனுமதி பெறவே அந்த காரணம் கூறப்பட்டது.போராட்டம் அன்று கோரிக்கையின் அம்சம் மாறலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும் 82-89 பெற்றவர்கள் முழுமையாக பாதிப்படைய மாட்டார்கள்.89 பெற்றவருக்கும் 90 பெற்றவருக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.இங்கு 82-89 பெற்றவர்கள் முழுமையாக ஒதுக்கப் படவில்லை.
போராட்டம் முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கப் பட்ட பின்புதான் நடைபெற உள்ளது.அதனால் கைது, தடியடி,FIR போன்ற எந்த அசம்பாவிதமும் நடைபெறாது எனவும் போராட்ட குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
7 comments:
Examla pass panni entha usum ellama pochu
Government is fooling the people. Let us show the strength of people in the next election.
we are waiting since 1 year this is also no use
TN CM consider and consult wth secretary to appoint SG tchrs by seniority.Thts the dinamani news
SG'la ena sata sikkal
SG'la ena sata sikkal
BT assistant la satta sikkal ullathu seniority Parkka vendum
Post a Comment